உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

69

(18) அதனாலும், நின் தலைவன், படைத் தலைவர் தாஞ் செல்லுமுன்னே நற்சொற் கேட்போர் கேட்டுவந்த நிமித்தச் சொற்களும் நன்றாயிருந்தனவாதலாலும் என்க.

நல்லோர்

-

படையுள் நற்சொற்கேட்டற் குரியோர்.

வாய்ப்புள் - வாயிற்பிறந்த நிமித்தச் சொல்.

வற்புறுத்துகின்றார்

.

என்பது

பெருமுது பெண்டிர் தாங்கேட்டுவந்த நற்சொற் கூறித் தலைமகளை ஆற்றுவிக்குமிடத்துத், தலைமகன் சென்றக்கால் நிகழ்ந்த நன்னிமித்தத்தினையும் உடன் எடுத்துக்காட்டி வ்வடியினால் இனிது பெறப்படுகின்றது. பகைவரது மண் கொள்ளச் செல்கின்ற வேந்தன் படைத்தலைவர் இங்ஙனம் ஒரு பாக்கத்திலே விட்டிருந்து விரிச்சி கேட்பரென்பது ஆசிரியர் தொல்காப்பியனாராற் சொல்லப்பட்டது. இப்பொருள் இவ் வடியினால் இனிது பெறப்படுவதாகவும், இதனை உணராத நச்சினார்க்கினியர் 18 ஆவது அடியிலுள்ள ‘நல்லோர்” என்பதனை 7 ஆவது அடியிலுள்ள 'போகி' என்னும் வினையொடு கூட்டி இடர்ப் பட்டும் இப்பொருளே கூறினார்; அங்ஙனம் இடர்ப்பட்டுக் கூட்டிப் பொருளுரைக்கும் வழிப், பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டபொருள் அவரால் உரையின்றி விடப்பட்டது.தலைமகன் குறித்துப்போன கார்ப்பருவ வரவினைக் கண்டு ஆற்றாளான தலைமகளை ஆற்றுவித்தற் பொருட்டுப் பெருமுது பெண்டிரும் விரிச்சி கேட்டுவந்து ஆற்றுவிக்கின்றார் என்பது நப்பூதனார் கருத்தாகலானும், மேலெடுத்துச் செல்லும் வேந்தன்

படைத்தலைவர் மட்டுமே விரிச்சி கேட்டற்கு உரியோர் ஏனையோர் உரியரல்லர் என்பது தொல்காப்பியனார்க்குக் கருத்தன்றாகலானும், யாங்கூறும் பொருளாற் பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டலும் படைத்தலைவர் வாய்ப்புகளும் இனிது பெறப்படுவதாக அவர் உரையாற் படைத்தலைவர் கேட்ட நன்னிமித்தம் ஒன்றுமே வலிந்து கொள்ளப் படுதலானும் நச்சினார்க்கினியருரை போலியுரையாமென்று மறுக்க.

(19- 23) நின்றலைவன், பகைவர் இடமெல்லாந் திறைப்பொருளாகக் கவர்ந்து கொண்டு, இங்ஙனந் தான் எடுத்த போர்வினையை ஒனிது முடித்து விரைவில் வருதல் உண்மையேயாம்; மாயோய்! நீ நின்துயரத்தை விலக்கு என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/102&oldid=1578955" இலிருந்து மீள்விக்கப்பட்டது