உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் - 9

இமிழ் பனிக்கடல் - ஒலி முழங்குங் குளிர்ந்த கடல். கொடுஞ் செலவு - விரைந்து போதல். சிறுபுன்மாலை - பிரிந்தார்க்குத் துன்பம் விளைக்குஞ் சிறு பொழுதான மாலை.

-

(7 11) ஊர்ப்பக்கத்தே போய் நெல்லும் மலருந் தூவிக் கையாற்றொழுது பெரிதுமுதிர்ந்த மகளிர் நற்சொற் கேட்டுநிற்ப

என்க.

அருங்கடி மூதூர் பகைவர் அணுகுதற்கரிய காவல் அமைந்த பழைய ஊர். யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப-யாழின் நரம்பொலிபோல் ஒலிக்கும் ஓரினமான வண்டுகள் ஆரவாரிக்க ; இவை தூவும் முல்லை மலரிற்றேனை நச்சிவந்தன.நாழிகொண்ட நாழி என்னும் முகந்தளக்குங் கருவியின் உட்பெய்த. நறுவீ நன்மணங் கமழும் மலர். முல்லை - முல்லைக்கொடி. அரும்பு அவிழ் அலரி - அரும்பு விரிந்த மலர். “நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்குஞ்” செம்முது பெண்டிர்" என்றார் புறத்திலும், 280.

-

(12 -1 7) அங்ஙனம் அவர் நிற்கின்றவளவிற் பசியகன்றின் வருத்தம் மிக்க சுழலுதலை நோக்கிய ஓர் இடைப் பெண் ; 'கோவலர் பின்னே நின்று செலுத்த உம்முடைய தாய்மார் இப்போதே வருகுவர்’ என்று சொல்வோளுடைய நற்சொல்லைக் கேட்டனம் என்க.

-

புதிது ஈன்ற கன்று ஆதலாற் ‘பசலைக்கன்று' என்றார்; பசலை’ பசுமை என்னும் பண்படியிற் பிறந்து குழவித் தன்மையை யுணர்த்திற்று, மிக இளைய கன்று என்றபடி, பசலைநிலவின்” என்றார் புறத்திலும் (392); நச்சினார்க்கினியர் ‘வருத்தத்தையுடைத்தாகிய கன்று' என்றது கூறியது கூறலாகும். உறு துயர் பாலுண்ணாமையால் உற்ற துன்பம்.

66

-

நடுங்கு சுவல் அசைத்த கையள் -குளிரால் நடுங்குந் தோள்களின்மேற் கட்டின கையளாய். கைய - கையிற் பிடித்த. கொடுங்கோல் - வருத்துகின்ற தாற்றுக் கோல். நன்னர் நன்மொழி - நன்றாகிய நல்ல மொழி, நன்மைப் பொருளை யுணர்த்தும் நன்னர் நல் என்னுஞ் சொற்கள் ஒருங்கு வந்தமை “ஒரு பொரு ளிருசொற் பிரிவிலவரையார்" என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியவற்றா னமைக்கப்படும் (சொல், எச்சவியல், 64).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/101&oldid=1578953" இலிருந்து மீள்விக்கப்பட்டது