உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

71

கிடந்தது. அற்றன்று, முல்லையொழுக்கமே பயின்று வரும் இப்பாட்டின்கட் “பூப்போல் உண்கன் புலம்பு முத்துறைப்பஎன்னும் இரங்கற்குரிய அழுகையினைக் கூறுதல் பொருந்தாதாம் பிறவெனின்; நன்று கடாயினாய், முன்னும் பின்னுமெல்லாம் முல்லையொழுக்கமே தொடர்ந்து வரும் இச் செய்யுளின் அகத்து, இடையே தோன்றிய அவ் விரங்கற் பொருள் பற்றி ஈண்டைக்கு வரக்கடவதாம் இழுக்கு ஒன்றுமில்லை; முழுவதூஉந் தொடர்ந்து அவ்விரங்கற் பொருள் வருமாயினன்றே அது குற்றமாம். அல்லதூஉங், குறிஞ்சி, பாலை, மருதம், முல்லை முதலான ஒழுக்கங்கள் நடைபெறுங்காலொம் இடை இடையே தலைவி மாட்டு ஆற்றாமை தோன்றும் என்பதூஉம், அங்ஙனம் தோன்றும் அவ்வாற்றாமை எல்லாம் நெய்தல் ஒழுக்கமாதல் இல்லை என்பதூஉம் ‘அகநானூறு’ ‘கலித்தொகை' முதலிய பண்டை நூல்களிலெல்லாங் காணக்கிடத்தலின், இம்

க்

முல்லைப்பாட்டி னிடையே வந்த அவ்வடி பற்றி ஈண்டை காவதொரு குற்றமுமில்லையென விடுக்க. ஆற்றுவிப்பார் யாருமின்றித் தனியளாயிருந்து கடலை நோக்கியுங் கானலை நோக்கியுந் தலைவி இருங்குதலும், பிறர் உள்வழி அவரோடு

இரங்கிக் கூறுதலும் நெய்தலொழுக்கமாம் என்பது தொல்லாசிரியர் நூல்களிற் காண்க! ஆற்றுவிப்பார் உள்வழி யெல்லாம் நிகழும் ஆற்றாமை 'நெய்தல்' ஆவதில்லை யாகலின், இப்பாட்டின் கண்ணுங் கணவன் கூறிய சொல்லும் பெருமுது பெண்டிரும் ஆற்றுவித்தற் காரணமாய் நிற்பத் தலைவிமாட்டுத் தோன்றிய ஆற்றாமை இடையே வைத்து மொழியப்பட்டதாகலின், இது நெய்தற்றிணையாதல் ஒரு சிறிதும் பொருந்தாமையின் நச்சினார்க்கினியர் நிகழ்த்திய மறுப்புப் போலியாமென்று ஒழிக.

பருவரல் - துன்பம், துயரம்; எவ்வம் - வருத்தம். மாயோள் வெளிறித் தளுக்காக மிளிருங் கரியநிறம் உடையவள்; "மாயோள் முன்கை யாய்தொடி” என்னும் பொருநராற்றுப் படை யடியுரையிலும் இப்பொருளே காண்க. கலுழ்ச்சி அழுகை. புலம்பு - தனிமை; அது தனித்தனியே இடையற்று விழுங் கண்ணீர்த் துளிமேல் நின்றது; இச்சொல் இப்பொருட் டாதல் “புலம்பே தனிமை என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தால் அறிக.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/104&oldid=1578957" இலிருந்து மீள்விக்கப்பட்டது