உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மறைமலையம் – 9

(24 - 28) மேல் எடுத்துச் சென்ற வேந்தன் படைத்தலைவர் பகைப்புலத்திற்கு அரணாய் அமைந்த முல்லைக் காட்டிலே பிடவஞ்செடிகளையும் பசிய தூறுகளையும் அழித்து, அங்குள்ள வேடரின் காவற் கோட்டைகளையும் அழித்து, முள்ளாலே மதில் வளைத்து அகலமாய்ச் சமைத்த பாசறை என்க.

ங்கே பகையரசன் பாடிவீட்டில் இருக்கும் இருப்பும், எடுத்துச்சென்ற வேந்தன் பாடிவீட்டில் இருக்கும் இருப்புமாக இரண்டு பாசறை யமைப்பு இதன்கட் சொல்லப்பட்ட தெனக்கொண்டு சில எழுதினாரும் உளர். நச்சினார்க்கினியர் உரையிலாதல் நப்பூதனார் பாட்டிலாதல் அங்ஙனம் இருவகைப் பாசறையிருப்புச் சொல்லப்பட்ட தில்லாமையால் அவர் கூறியது பொருந்தா வுரையாம் என்க.

இவ்

கான்யாறு தழீஇய அகல் நெடும்புறவு - காட்டியவாறு சூழ்ந்த அகன்று நீண்ட முல்லைக்காடு. சேண்நாறு - நீள L மணங்கமழும்; அடைமொழியைப் பைம்புதல்' என்பதனொடு கூட்டியுமுரைத்தல் ஆம். எருக்கி - அழித்து, புழை அருப்பம் - வாயில் அமைந்த கோட்டை. "இடு முட்புரிசை” முள் இடு புரிசை என மாற்றுக; காட்ட காட்டின் கண் உள்ள, இது முள்ளுக்கு அடை; புரிசை - மதில் ‘ஏமம்உறு' இடைக்குறைந்து ஏமுறு எனவாயின; ஏமம் - காவல். படுநீர்ப்புணரி ஒலிக்கின்ற நீரையுடைய கடல்.

-

-

(29 -36) இப்பாசறையின் உள்ளுள்ள தெருக்களின் நாற்சந்தி கூடும் முற்றத்திற் காவலாக நின்ற மதயானை, கரும்பொடு கதிரும் நெருங்கக் கட்டிய அதிமதுரத் தழையினை உண்ணாமல், அவற்றால் தனது நெற்றியைத் துடைத்துக் கொம்பிலே தொங்கவிட்ட தன் புழைக்கையிலே கொண்டு நின்றதாகப் பாகர் பரிக்கோலினாற் குத்தி வடசொற் பல்காற் கூறிக் கவளம் ஊட்ட

என்க.

-

உவலைக் கூரை - தழைகள் வேய்ந்த கூரை; பாடி வீட்டில் மறவர் இருத்தற்காக அறை அறையாக வகுத்து மேலே தழைகள் வேய்ந்திடப்பட்ட கூரைகள் இவை, ஒழுகிய தெரு இங்ஙனம் வகுக்கப்பட்ட கூரைகள் ஒருங்காக இருக்கும் தெருக்கள், கவலை - நாற்சந்தி கூடும் இடம். பாடியினுட் புகுவார் இவ்விடத்திலுள்ள முற்றத்தின்கண் வந்தே பாசறையிலுள்ள தெருக்களுக்குப் போகல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/105&oldid=1578958" இலிருந்து மீள்விக்கப்பட்டது