உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

-

73

வேண்டுதலின், இங்கே யானை காவலாக நிறுத்தப்பட்டது, தேம்படுகவுள -மதநீர் ஒழுகுங் கன்னத்தினையுடைய ஓங்கு நிலைக் கரும்பு - உயர்ந்து வளர்ந்து நிற்றலையுடைய கரும்பு.கதிர் மிடைந்து யாத்த நெற்கதிர்களை நெருங்கப் பொதிந்து கட்டிய. வயல் விளை - வயலில் விளைந்த. இன்குளகு அதிமதுரத் தழை. அயில்நுனை கூரிய முனை, கவைமுள் கருவி - கவர்ந்த அல்லது பிளப்பான முள்ளுள்ள பரிக்கோல். கல்லா இளைஞர் யானை பழக்குஞ் சொற்களையன்றி வேறு வடசொற்களைக் கல்லாத இளையர், கைப்ப - ஊட்ட

-

-

(37 - 44 ) துறவோன் தனது முக்கோலை நாட்டி அதன்கட் காவியுடையைத் தொங்கவிட்டு வைத்தாற்போலப் போரிற் பின்னிடாமைக்கு ஏதுவான வலிய வில்லில் தூணியைத் தொங்கவிட்டுப், பின் அவ்விற்களையெல்லாம் படங்குக்காக ஊன்றிப்,பின்னர் அவை தம்மையெல்லாங் கயிற்றால் வளைத்துக் கட்டிச் செய்த இருக்கையிற் குந்தக் கோல்களை நட்டு, அவற்றொடு படல்களை வரிசையாகப் பிணைத்து, இவ்வாறு இயற்றிய 6 வளைந்த வில்லாலான அரணமே தமக்குக் காவலிடமாக அமைந்த வேறுவேறான பல்பெரும் படைகளின் நடுவில், நீண்ட குத்துக் கோல்களொடு சேர்த்துச் செய்த பலநிறம் வாய்ந்த மதிட்டிரையை வளைத்து வேறோர் உள்வீடு அரசனுக்கு என்று எல்லாரும் உடன்பட்டுச் செய்து என்க.

-

-

-

கல் - காவிக்கல், கல்தோய்த்து உடுத்த- துகிலைக் காவிக்கற் சாயத்தில் தோய்த்து உடுத்த. படிவம் தவவேடம்; “பல்புகழ் நிறுத்த படிமையோனே" என்னும் பனம்பாரனார் பாயிரச் செய்யுளிலும் இச்சொல் இப் பொருட்டாதல் காண்க. அசைநிலை - தங்க வைத்த தன்மை; என்றது காவியுடைய, கடுப்ப ஒப்ப; இச்சொல் மெய்உவமத்தின் கண் வருமென்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். தூணிநாற்றி அம்பறாப் புட்டிலைத் தொங்கவிட்டு. கூடம், கூடாரம், படங்கு என்பன ஒருபொருட் கிளவிகள். பூந்தலைக் குந்தம் - பூச்செதுக்கின தலையையுடைய கை வேல். கிடுகு - படல். நிரைத்து வரிசையாக வைத்து. நாப்பண் - நடு. காழ்கம்பு கோல். கண்டம் - கூறு. கூறுபட்ட பல நிறத்தினையுடைய திரையை உணர்த்தியது ஆகுபெயரால்; "நெடுங்காழ்க் கண்டம் நிரல்பட நிரைத்த” என்றார் சிலப்பதிகாரத்திலும்.

2

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/106&oldid=1578959" இலிருந்து மீள்விக்கப்பட்டது