உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மறைமலையம் – 9

(45 - 49) வாளினைத் தமது கச்சிலே சேரக் கட்டின மங்கையர் பாவையின் கையிலுள்ள விளக்குகள் கெடுந்தோறுந் திரிக் குழாயினால் திரியைக் கொளுத்தி அவற்றைக் கொளுத்த என்க.

இதற்கு இவ்வாறன்றி மங்கையர் கையிலுள்ள விளக்கினைத் திரிக்குழாயையுடைய சிற்றாட்கள் கொளுத்த என்றுரைப்பின், ‘மங்கையர்' என்னுஞ் சொல் தழுவும் வினையின்றி நின்று வற்றுமாகலின் அப்பொருள் பொருந்தாதென்க.

-

தொடி கைவளை; இப்பொருட்டாதல் “கங்கணங் கைவளை யொருபலந் தொடியே” என்னும் பிங்கலந்தையிற் காண்க.புறம் - முதுகு. கூந்தல் அம் சிறுபுறத்து - கூந்தல் கிடக்கும் அழகிய சிறிய முதுகினையுடைய என்று மங்கையர்க்கு அடையாக்குக. இரவைப் பகலாக்கும் வலிய பிடியமைந்த ஒளியுடைய வாள். விரவு - கலந்த, சேர்ந்த; ‘விரவ' எனத் திரிக்க. வரிக்கச்சு வரிந்து கட்டப்பட்ட இரவிக்கை; 'வரி' நிறம் எனினுமாம், நிறத்தினையுடைய கச்சு என்க. குறுந்தொடியணிந்த முன்கையினையுங் கூந்தலசைந்து கிடக்குஞ் சிறு புறத்தினையுமுடைய மங்கையர், வாள் விரவ வரிந்து கட்டின கச்சையணிந்த மங்கையர், என அடைமொழிகளை இருகாற் பிரித்துக் கூட்டுக. நெய் உமிழ் சுரை - நெய்யை ஒழுகவிடுந் திரிக்குழாய்.நந்து தொறும் கெடுந்தோறும்.

-

(50 - 54) மணியினோசையும் அடங்கிய நள்ளிரவில், அசையும் மோசி மல்லிகைக்கொடியேறிய சிறு தூறுகள் துவலையொடு வந்து அசையுங் காற்றினால் அசைந்தாற் போலத், தூக்க மயக்கத்தால் அசைதலையுடைய மெய்க்காப்பாளர் காவலாகச் சுற்றித் திரியவென்க.

நெடுநா வெண்மணி - நீண்ட நாக்கினையுடைய வெள்ளி மணி. நிழத்திய - நுணுகிய; அஃதாவது முன்னுள்ள ஓசை அடங்கிய; இச்சொல் நுணுக்கப் பொருளையுணர்த்துதல் “ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சா அய், ஆவயின் நான்கும் நுணுக்கப்

ாருள” என்னுந் தொல்காப்பிய உரியியற் சூத்திரத்திற் காண்க; இனி ‘நிழற்றல்' எனப் பாடமோதுவாருமுளர்; 'நிழற்றல் ஒளிவிடுதலெனப் பொருடரும் பிறிதொரு சொல்லாதலின் அஃதீண்டைக்குப் பொருந்தாது; அற்றேல், திவாகரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/107&oldid=1578960" இலிருந்து மீள்விக்கப்பட்டது