உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மறைமலையம் – 9

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

இந்நூல் பாட்டினியல்பு, பட்டினப்பாலை செய்யுள், பொருட் பாகுபாடு, பாலை, வாகை, பாட்டின் வரலாறு, ஆக்கியோன் வரலாறு, பாட்டுடைத் தலைவன், பாட்டின் நலம் வியத்தல், இப்பாட்டின் கட்டோன்றிய பழைய நாள் வழக்கவொழுக்க வரலாற்றுக் குறிப்புகள்

தலைப்புகளில் சிறந்த ஆய்வு நூலாக அமைந்துள்ளது.

ஆகிய

பட்டினப்பாலையாசிரியர் உருத்திரங்கண்ணனார்

திறனைப் பலபடப் பாராட்டுகிறார் அடிகளார். உருத்திரங் கண்ணனார் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுருக்கமாகப் பாடும் நுட்ப அறிவின் வன்மையினையையும், காவிரிப்பூம்பட்டினத் தின் கவின்மிகு காட்சியைக் கண்முன் நிறுத்தும் பேராற்றலையும், கற்பார் அறிவினை ஒழுங்குபடுத்தி, ஒருமுகப்படுத்தி உணர்வோங்கச் செய்யும் கடமையுணர் வையும் அடிகளார் பாராட்டுகிறார். உருத்திரங் கண்ணனாரது 'நல்லிசைப் புலமை', 'உலகவியற்கைப் பொருட்டோற்றங் இடையறாது திரிந்து கண்டு வியந்து கழிபெரு மகிழ்ச்சி' யெய்தும் பண்பு, 'உலகவியற்கையினை வழாது திரிந்து கண்டு வியக்குமியல்பு', ஆகிய பண்புகளையும் அடிகளார் தம் ஆய்வில் கண்டு காட்டியுள்ளார்.

களை

பெயரின் தன்மை கொண்டு, உருத்திரங்கண்ணனார் சைவ சமயத்திற்குரியவர் எனக் கருதப்பட்டாலும், வலிய சான்றின்மையால் அவரது சமயம் இதுவென உறுதியாகக் கூறப்படாமை அடிகளாரின் நடுநிலை ஆய்வுக்குச் சான்றாயமைகிறது.

– நா. செயப்பிரகாசு

மறைமலை அடிகளாரின் இலக்கிய படைப்புகள்,

பக். 4,5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/135&oldid=1578992" இலிருந்து மீள்விக்கப்பட்டது