உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

மலையின் மாட்சி

இந்தியா மலைகள் நிறைந்த நாடு. அலைகள் பாயும் கடல்கள் சூழ்ந்த சூழ்ந்த நாடு. மலையும் மலையும் கடலுமே இந்தியப் பெருநாட்டின் காப்பரண்கள். கடல்கள் பரப்பிற்கும் ஆழத்திற்கும் உவமையாகின்றன. மலைகள், மலைகளின் மாண்புகள் சொல்லிமுடியாது. அளக்கமுடியா அளவு: துளக்கமில்லா உறுதி; அசைதல் இல்லாத்திண்மை; கண்டுணர முடியாத காட்சிகள்; மனத்தால் மதிக்கமுடியாத பெருமைகள் கொண்டவை மலைகள்.

லனைய

தமிழ்நாட்டிற்கு ஒரு மாமலை - அதுதான் மறைமலை. கொள்கையில் மலையனைய உறுதியும், கல்வியில் கட பரப்பும், புலமையில் வான்தொடும் உயரமும், அறிவாற்றலில் நிலத்தினும் விரிந்த நீர்மையும் இவை அனைத்தின் கூட்டுச் சேர்க்கையான ஆளுமையும் அமைந்த மலையே மறைமலை.

அவரே ஒரு பேரியக்கம். அவர் கண்ட இயக்கங்கள் பல. தாய்மையும் தலைமையும் உடையது தனித்தமிழ் இயக்கம். சைவ சமாஜம் கண்டதும், சைவ மறுமலர்ச்சிக்குரிய இயக்கங் களைக் கண்டதும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்கவை.

புலமையால் தலைமையும், சாதனைகளால் பெருமையும் பெற்றவர் அடிகளார். இந்த அண்ணாமலையின் ஒளி ஒரு நூற்றாண்டுக்காலம் தமிழியக்கத்தை வழிநடத்திச் செல்கிறது. இந்த மலையில் இருந்து தோன்றிய அருவிகள் பல. அவை நாடெல்லாம் பாய்ந்து நல்ல தமிழை வளர்த்தன.

இந்தப் பெருஞ்சுடரில் இயற்றிய சுடர்கள் எண்ணற்றவை. அவை நல்கும் ஒளி தரும் வெளிச்சம் தமிழர் அக இருட்டையும் புற இருட்டையும் ஒருங்கே போக்கின. அவர் அமைத்த ஒளிப்பாதை நீண்டது; நெடியது; நீள் பயன் அளிப்பது.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/136&oldid=1578993" இலிருந்து மீள்விக்கப்பட்டது