உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மறைமலையம் – 9

மறைமலை அடிகள் பன்முக நலங்கள் பெற்றிருந்தாலும் தலைமைக் கூறுகள் நான்கினை மட்டும் எடுத்துச் சுருக்கமாக விளக்குவது பதிப்பாசிரியராகிய என் கடமையாகிறது.

1. சிந்தனையாளர்

2. ஆராய்ச்சியாளர்

3. பேரறிஞர்

4. பொழிஞர்

சிந்தனையாளர்

தமிழகத்தின் சிந்தனைப் போக்கை மாற்றியவர்களில் முதல் வரிசையர். தமிழ் மொழி, தமிழர் வாழ்வு, தமிழர் வழிபாடு, தமிழர் நாகரிகம் முதலியவை பற்றி நிரம்பச் சிந்தித்த அறிஞர்.தெளிவாக அறிந்திடுதலும், தெளிவாக மொழிந்திடுதலும் இவர் சிந்தனை ஆற்றலின் வெளிப்பாடு.யோக நெறியில் வல்லவர்; தவச்செல்வர்; தமிழ் மாமுனிவர். ஆதலால் ஒன்றிய உள்ளத்தராய் இவர் கண்டறிந்த உண்மைகள் தமிழ்ச் சிந்தனையை வளப்படுத்திய தோடு தமிழர் வாழ்விலும் மறுமலர்ச்சி கண்டது.

ஆராய்ச்சியாளர்

அடிகளாரின் கல்விப்பரப்பு இவர் ஆராய்ச்சிக்குப் பெரும் துணை செய்தது. இவர்களின் நுண்மாண் நுழைபுலம் தமிழ் ஆய்வுக்குப் புதுத்தடம் வகுத்தது. மரபுவழிப் புலமையும், தமிழ் வடமொழி ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் புலமையும், தேடலில் டையறா முயற்சியும், உண்மை காண்பதில் அடிகள் ஆற்றிய வேள்விகளின் பயனுமே ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்னும் பெருநூல். பெருநூல் படைத்தல் எல்லார்க்கும் இயலும் எளிய செயலன்று. அதுவும் மாபெரும் ஆய்வு நூல் உருவாக்குதல் பாமலையாம் மறைமலைக்கே சாலும். அவர்தம் ஆராய்ச்சிப் பொறிகள் ஒளி நல்குவன. அவருடைய ஆராய்ச்சி முடிவுகள் வீரியம் மிக்க விதைகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/137&oldid=1578994" இலிருந்து மீள்விக்கப்பட்டது