உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

பேறிஞர்

105

அண்ணாவை ‘அறிஞர்' என்னும் வழக்கு 40களில் முகிழ்ந்தது. ராஜகோபாலச்சாரியாரை ‘மூதறிஞர்’ என அழைத்தனர். இந்நாளில் வ.சு.ப. மாணிக்கனாரை ‘மூதறிஞர்’ எனப்போற்றி மகிழ்கின்றனர். அரவிந்தர்போல மறைமலை அடிகள் ‘அறிஞருக்கறிஞர்'. அவர் கல்விக்கு வரம்பில்லை; புலமைக்கு எல்லைஇல்லை. ‘அறிவுக்கடல்' என்னும் இதழ் நடத்தியவர் இந்தப் பேரறிஞர். பேரறிவும் பேராற்றலும் பெற்ற அடிகளார் நிகழ்த்திய பெருஞ்சாதனைகள் பல.

இந்தி எதிர்ப்புப் போரிலும், தனித்தமிழ் இயக்கம், தமிழ்மீட்சி, சைவசமய மறுமலர்ச்சி ஆகிய பல தளங்களிலும் வெற்றி கண்ட மாவீரர் மறைமலை அடிகள். பேரறிஞர் கண்ட சிந்தனைக் களங்களும் கருத்துப் போர்க்களங்களும் தமிழ்த் திறனாய்வு வரலாற்றில், இலக்கிய வரலாற்றில் கால வெள்ளம் கரைத்திட முடியாத சுவடுகள். இத்தகைய பேரறிஞர் நூல்களைப் பெருமையுடன் வெளியிடுகிறோம்.

ஆசிரியராய்

வாழ்வைத்

தொடங்கிய

அடிகளார் தமிழகத்து ஞானாசிரியராய் விளங்கினார்கள். அடிகளிடம் கிறித்துவக் கல்லூரியில் நேரடியாகப் பயின்றவர்கள்.

1. ச. சோமசுந்தர பாரதியார்

.

2.டி.கே.சிதம்பரநாத முதலியார்

3. எஸ். வையாபுரிப் பிள்ளை

4. வ.சு. செங்கல்வராய பிள்ளை

முதலியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

அடிகளிடம் அடியுறைந்து கற்றவர்களுள் சிலர்:

1. இளவழகனார்

2. முருகவேள்

3.பாசுமணி

அடிகளாரின் கொள்கைகளைக் கற்று, தனித்தமிழ் இயக்கம் வீறுபெற உழைத்த வீறுகள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/138&oldid=1578995" இலிருந்து மீள்விக்கப்பட்டது