உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

1. பாவாணர்

மறைமலையம் – 9

2. பெருஞ்சித்திரனார்

3. இளங்குமரன்

4.திருமுருகன்

5.மாமல்லன்

இன்னும் பலர்,

பொழிஞர்

இந்த நூற்றாண்டின் தமிழ் மேடை பெற்ற சொற் பொழிவாளர்களில் மறைமலை அடிகளாருக்குத் தனிச்சிறப்புண்டு இவர் பொழிவு, கருத்துச் செறிவு மிக்க பொழிவு. பொருள் பொதிந்த புதுமைப் பொழிவுச் சிந்தனையாளராய் - ஆராய்ச்சி யாளராய் - பேரறிஞராய் - நூலாசிரியராய் இவர் திகழ்ந்ததால் பேரறிஞராய்-நூலாசிரியராய் இவர்தம் பொழிவுகள் தமிழ்மணக்கும் கற்பக மலர்கள்; அறிவு நலம் சான்ற செவிநுகர் கனிகள். இவர் வழியில் தனித்தமிழில், தூய தமிழில், நல்ல தமிழில் பொழிஞர் அணி ஒன்று பூத்துக் குலுங்குகிறது. அடிகள் பேச்சு வெறும் பேச்சன்று; அடிகள் உரை வெற்றுரையன்று பொழுது போக்குப் பொழிவன்று. பொழுதைப் பொன்னாக்கும் புலமைப் பொழிவு. அந்தக் கருத்துப் பொழிவால் நிரம்பிய தடாகங்கள் எண்ணற்றவை.

.

இளங்கோவடிகள், பட்டினத்தடிகள், இராமலிங்க அடிகள், ஞானியாரடிகள், மறைமலை அடிகள், குன்றக்குடி அடிகள், ஊரன் அடிகள், அமுதன் அடிகள் என வாழையடி வாழையென ‘அடிகள் வரிசை' வளர்கிறது; தொடர்கிறது. தமிழ்மீட்சி, தமிழ்க் காப்பு, தமிழ் வளர்ச்சி, தமிழ் பரப்புதல் முதலிய பல்துறைகளில் அடிகள் ஆற்றிய அளப்பெரும் பணிகளை சிந்தனையாளர் இளங்குமரன் அவர்களும் அறிஞர் அரவிந்தன் அவர்களும் தங்கள் ஆய்வுரைகளில் திட்பநுட்பம் செறிந்த சூத்திரம் போல் விளக்கி உள்ளனர். அடிகள் நூல்களை நாட்டுடைமை ஆக்கிய நல்லரசுக்கு எங்கள் நன்றி. தமிழர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/139&oldid=1578996" இலிருந்து மீள்விக்கப்பட்டது