உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மறைமலையம் - 9

பணியிலும் பங்குகொண்டார். மெய்ப்புத் திருத்தினார்; அச்சில் மெய்ப்புத் திருத்தம் செய்தார். அச்சுப் பொறியில் பல நேரங்களில் அச்சேற்றினார்; நூல்கட்டு செய்தார். வெளியூருக்கு நூல் அனுப்பக் கட்டுக் கட்டினார். இவ்வாறு பதிப்பில் தம்மால் முடிவதனைத் தாமாற்றினார். பதிப்பு வரலாற்றில் அடிகளார் பங்கு ஓர் உழைப்பு முத்திரை.

"என் தமிழ்நடை கடினமானது என்பர். யான் எளிதாக எழுதவேண்டுமென்றும் முனைகின்றேன். 'வம்மின்’, ‘வருக என்பவற்றையெல்லாம் ‘வாருங்கள்' என்று எழுதப் பழகிக் கொண்டு வருகிறேன்.”

என்ற அவர்தம் கருத்திலிருந்து, உலகியல்பை ஒட்டிச் செல்லவேண்டுமென்ற அவரது உணர்வு வெளிப்படுகிறது.

“யான் தமிழில் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் நீங்கள் செவ்வையாக உன்னித்து வந்தால் தமிழிற் பிழையின்றிப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெறுவீர்கள்” என்று அடிகளாரின் தன்னம்பிக்கை அறிவிப்பின்படி நாவாலும் கையாலும் ஒவ்வொருவரும் மலையாகலாம்; இயலாது போனால் குன்றாக ஆகலாம்.

கவிஞர்கோ கோவை. இளஞ்சேரனார்

அடிக்குறிப்புகள்

1. பாரதிதாசன் தேனருவி பாடல் 57.

2.

3.

4.

5.

சௌந்தரா கைலாசம், நாகைத் தமிழ்ச் சங்க மறைமலையடிகளார் நினைவு மலர்.

U. 71.

மு. வரதராசன், மேலது, ப. 61.

அடிகளார், பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும், பக். 22.

முன்றுறையரையனார், பழமொழி, பாடல் 160.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/145&oldid=1579025" இலிருந்து மீள்விக்கப்பட்டது