உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

66

  • மறைமலையம் - 9

“அற்றை நக்கீரனாரும் பிற்றைச் சிவஞான முனிவரும் ஓருருக் கொண்டு வேதாசலனாராகப் போந்து இற்றைத் தமிழ் வளர்க்கிறார்

என்றும்,

"வேதாசலனார் தமிழ், 'செந்தமிழ்

சங்கத்

தமிழ்' - என்னை அவ்வாறு சொல்லவும் எழுதவும் செய்தது.இந்நாளில் சங்க நூல்களின் சுவையைத் தமிழ் நாட்டுக்கு ஊட்டிய பெருமை வேதாசலனார்க்கு உண்டு என்று அறுதியிட்டுக் கூறுவேன்.”

என்றும்,

66

"தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகட்கு உண்டு. அவர் தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் ஆராய்ச்சியும் பேச்சும் எழுத்தும் தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரழும் முழங்கும்.”

என்றும்,

அடிகள்பேச்சு,பலபேச்சாளரைப்படைத்தது;எழுத்து,

பல

எழுத்தாளரை

நூலாசிரியன்மாரை

ஈன்றது; நூல் பல அளித்தது; அடிகளே

தென்னாடு; தென்னாடே அடிகள்’ என்று கூறல் மிகையாகாது'

என்றும் போற்றுகிறார் (வாக்கைக் குறிப்புகள்)

திரு.வி.க., அடிகளாரைப் பற்றி எழுதியுள்ள இக்கருத்துகளை ஆழ்ந்து எண்ணிப் பார்ப்பின், அடிகளார்க்குத் தமிழுலகம் பட்டுள்ள கடப்பாடு மலைமேல் விளக்கென விளங்கும் அடிகளார் பிறப்பும் தொண்டும் ஆய்வும் வீறும் எத்தகு பெருமைக் குரியன என்பதைத் தமிழுள்ளங்கள் தளிர்ப்புறப் பாராட்டத் தவறா அல்லவோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/147&oldid=1579043" இலிருந்து மீள்விக்கப்பட்டது