உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

115

தமிழுக்கு அடிகளார் செய்த செவ்விய பணி, அல்லது அடிகளாரால் தமிழ்மொழி பெற்ற நயப்பாடு எளிதா? அவற்றை யெல்லாம் விரிய விரிய ஆராய்ந்த மொழிஞாயிறு பாவாணர், 'மறைமலையடிகள் பல்துறையாற்றற் பதிகம்' பாடினார். அப்பதிகத்தில் ஒரு பாட்டு; ஒரோ ஒரு பாட்டு:

66

மூவா யிரமாண்டு மோது வடமொழியால் சாவாந் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மலைமலை யார்”

என்பது.

‘அப்பர்' என்றது தனித் தமிழ்த் தந்தை என்பதைக் குறிப்பது.'அமரர் குறிப்பது. 'அமரர்’ என்பதற்குப் 'போர் மறவர்' என்பது பாவாணர் குறிப்பு.

அடிகளார் தொண்டின் பயன்பாட்டை நன்கனம் ஆய்ந்தார் மூதறிஞர் செம்மல் வ.சு.ப மாணிக்கனார். அதனால்,

"மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம், தமிழ்த் தாயின் நெஞ்சு புரையோடாதும் தமிழர் அறைபோகாதும் காத்தது; தமிழின் வயிற்றில் இருந்து முன்பு பல திராவிட மொழிகள் கிளைத்து அதன் பரப்பைச் சுருக்கியது போல மீண்டும் தமிழகத்துள் ஒரு புதிய திராவிட மொழி பிறந்து தமிழை இன்னும் குன்றிக் குலையாதவாறு தடுத்தது.இன்று பாடநூல்கள் பெரும்பாலும் தமிழ் வடிவாக வருகின்றன. ஒரு சார் இளைஞர் கூட்டம், எழுத்தாளர் கூட்டம் குடிநீரைத் தூய நீராகக் காத்தல்போலத் தமிழைத் தூயதாகக் காத்து வருகின்றன. கலப்பு மிகுதி யிருந்தாலும் பல செய்தித் தாள்கள் தமிழ்த் தூய்மையையும் முடிந்த அளவு பேணி வருகின்றன. வாழ்த்துக்கள் வரவேற்புகள் அழைப்பிதழ்கள் எல்லாம் நல்ல தமிழ்ப் பைங்கூழ் வளரும் பைந்நிலங்களாக மிளிர்கின்றன. இந்நன் மாற்றங்களையெல்லாம், மறைமலையடிகளைப் பெற்றமையால் தமிழ்த்தாய் பெற்றாள். அத்தவமகன் அடிச்சுவட்டை அன்புச் சுவடாகப் போற்றிப் பாலின் தூய்மை போலத் தமிழின் தூய்மையைக் கடைப்பிடித்து வாழும் இளைய மறைமலையடிகள் இன்று பல்கி வருப ஆதலின் தமிழ் தனித்தடத்திற் செல்லும் புகைவண்டிபோலப் பழைய புதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/148&oldid=1579052" இலிருந்து மீள்விக்கப்பட்டது