உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மறைமலையம் - 9

தன் சொற்களைக் கொண்டே விரைந்து இயங்கி முன்னேறும் என்று உறுதி கொள்வோம்” என்றார். (தனித்தமிழ்த் தொண்டும் எழுத்தாளர் கடமையும் - கட்டுரை)

66

பழைய புதிய தன் சொற்களைக் கொண்டே விரைந்து இயங்கி (த் தமிழ்) முன்னேறும்” என்பது உறுதி யாயிற்றா என வினாவின், அடிகளாராலேயே மெய்ப்பிக்கப் பட்டமையை, "தேனும் பாலும் போன்ற தூய தீந்தமிழ்ச் சொற் களால் உரைநடையும் செய்யுளுமாகிய இருவடிவிலும் பல்துறை தழுவி ஐம்பதிற்கு மேற்பட்ட அருநூலியற்றி முதலிரு கழக நிலைக்குத் தமிழைப் புதுக்கி அதற்குப் புத்துயிர் அளித்தவர் மாநிலத்தில் மக்கள் உள்ள வரை மறையாப் புகழ்பெற்ற மறைமலையடிகளே"

என்கிறார் பாவாணர் (வடமொழி வரலாறு: முன்னுரை) தகவார்ந்த தமிழ் எழுதுவதற்குத் தம்மை மேற்கோளாகக் கொள்ளல் சாலும் என்பதை, “யான் தமிழில் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் நீங்கள் செவ்வையாக உன்னித்து வந்தால் தமிழிற் பிழையின்றிப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெறுவீர்கள்” என்று கடிதத்தில் பொறித்தமை விளக்கிக்காட்டும்.(மறைமலையடிகளார் கடிதங்கள் - 1)

அடிகளார் நூல்களைக் கற்றால் தமிழின் முழுதுறு பரப்பைக் கற்ற பயன் செய்யும் என்பது அவர் தம்மைத் தாமே மதிப்பிட்ட மதிப்பீடாம். அதனை. அவர் தம் திருமகனார் மறை. திருநாவுக்கரசு அவர்கள் “யான் ஐம்பது ஆண்டுகட்கு மேலாக ஏராளமான நூல்களை நூல்களை ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன்.பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறிய முடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்குந் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை. அது முடியவும் முடியாது. தேவையும் இல்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை யெல்லாம் பிழிசாறாக யான் வடித்துள்ளேன். என் நூல்களைப் படித்தால் போதும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/149&oldid=1579061" இலிருந்து மீள்விக்கப்பட்டது