உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

117

அதனால் தமிழ் முழுதுங்கற்ற பயனை அடையலாம் என்பர்.” என்கிறார் (மறைமலையடிகள் வரலாறு-827)

எடுத்துக்கொண்ட கொள்கையில் உ கொள்கையில் உறுதிப்பாடு என்பது நினைவும் சொல்லும் செயலும் ஒருப்பட்டு நிற்கும் ஒரு தன்மையாம். அத் தன்மைக்குத் தம்மைத் தாமே சான்றாக்கிக் கொண்டு நிலைப்படுத்திய சான்றோர் மறைமலையடிகளார் என்பது இதுவரை கண்டவற்றால் விளங்கும்.

தனித்தமிழ் ஊற்றம் ஏற்படு முன்னரே, தமிழ்ச் சொல் பிறசொல் என்னும் ஆய்வு மேற்கொண்டிருந்தார் அடிகளார்.

.

1902 இல் 'ஞானசாகரம்' என்னும் மாதிகையை அடிகளார் தொடங்கினார். 'தமிழ் -வடமொழியினின்றும் பிறந்ததா?” என்றும் ‘தமிழ் - மிகப் பழையதொரு மொழி' என்றும் கட்டுரைகள் அந்நாளிலேயே எழுதினார்.

1903 இல் கலைநூற் புலமைப் பாடநூல்களுள் ஒன்றாக முல்லைப்பாட்டு இருந்தது. அதற்கு அரியதோர் ஆய்வுரை கண்டார் அடிகள்.

LITTL

66

"இப்பாட்டினுள்

டச்

சொற்களையும் வேற்றுமை உருபுகளையும் நீக்கி எண்ணப்பட்ட சொற்கள் சிறிதேறக் குறைய ஐந்நூறு சொற்களாகும். இவற்றுள் முன் வந்த சொல்லே பின்னும் வருமாயின் பின்வந்தது எண்ணப்படவில்லை. இவ்வைந்நூறு சொற்களுள் நேமி, கோவலர், படிவம், கண்டம், படம், கணம், சிந்தித்து, விசயம், அஞ்சனம் என்னும் ஒன்பதும் வடசொற்கள்.யவனர் மிலேச்சர் இரண்டும் திசைச் சொற்கள். ஆக இதனுட் காணப்பட்ட பிறமொழிச் சொற்கள் பதினொன்றேயாம். எனவே இப்பாட்டினுள் நூற்றுக்கு இரண்டு விழுக்காடு பிற சொற்கள் புகுந்தன என்றறிக; ஏனையவெல்லாம் தனிச் செந்தமிழ்ச் சொற்களாகும்” என்று ஆய்ந்து எழுதுகிறார்.(பக் 56)

1906 இல் பட்டினப்பாலை கலைநூற்புலமைக்குப் மாக இருந்தது. அதற்கும் ஆய்வுரை கண்டார் அடிகளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/150&oldid=1579069" இலிருந்து மீள்விக்கப்பட்டது