உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

66

மறைமலையம் - 9

'இப்பாட்டின்கண் சிறிதேறக் குறைய ஆயிரத்து முந்நூற்று அறுபத்தொன்பது (1369) சொற்கள் இருக்கின்றன. இவற்றுட் பதினொரு சொற்கள் வடசொற்களாம். அவை மகம், அங்கி, ஆவுதி, பூதம், மது, பலி, பதாகை, அமரர், கங்கை, புண்ணியம், சமம் என்பனவாம், ஞமலி என்னும் ஒரு பூழிநாட்டுக்குரிய திசைச் சொல்லாகும். ஆகவே

சால்

ப்பாட்டில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடு பிற நாட்டுச் சொற்கள் கலந்தன என்பது அறியற்பாற்று. இதனால் இவ்வாசிரியர் காலத்தில் தமிழ் மிகவும் தூயதாய் வழங்கப்பட்டு வந்ததென்பது புலப்படும் என்க" என்கிறார். (பக்77)

தமிழ்ச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் எண்ணிக் காட்டிய அடிகளார் எழுதிக் காட்டிய அளவில் நின்றாரா? இல்லை! மறுபதிப்புகளில் தம் எழுத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடந்த பிறமொழிச் சொற்களைக் களைந்தார். அவ்வாறு களைந்ததையும் நூல் முகப்பில் குறிப்பிட்டார். பிறபிற நூல்களிலும் அம்முறையே செம்முறையெனக் கைக்கொண்டார்.

1902 ஆம் ஆண்டில் அடிகளார் தோற்றுவித்த மாதிகை ஞானசாகரம்' என்பது. 1911 இல் தோற்றுவித்தது ‘சமரச சன்மார்க்க சங்கம்’ தனித் தமிழ் வாழ்வாகிய அடிகளார் ‘சுவாமி வேதாசல' மாக இருந்த தம் பெயரை, 'மறைமலையடிகள்’ ஆக்கினார். ‘ஞான சாகர’ த்தை ‘அறிவுக் கடலா’ க்கினார். ‘சமரச சன்மார்க்க சங்க'த்தைப் பொது நிலைக் கழக' மாக்கினார். தம் கொள்கைக்குத் தாமே சான்றானார். சான்றோரைச் சார்ந்த சான்றோர் எவ்வாறாவர்? அவரும் சான்றாவர் தாமே! 'பால சுந்தர’மாகப் பயில வந்தவர். 'இளவழகனார்' ஆனார்! அழகரடி களும் ஆனார்! அடிகளார் மகளார் ‘திரிபுர சுந்தரி’ யார் ‘முந்நகரழகி' யானார்; மருகர் ‘குஞ்சிதபாதம்’ ‘தூக்கிய திருவடி' யானார்! பின்னர்ப் பிறமொழிப் பெயருடையார் தனித் தமிழ்ப் பெயர்களைத் தேடித் தேடிப் பெருமிதமாக மாற்றிப் பேணும் நிலைமை தமிழ் மண்ணுக்கும், கடல் கடந்தும் நிலங்கடந்தும் வாழும் தமிழ் கூறு நல்லுக மண்ணுக்கும் இயல்நெறி யாயிற்று!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/151&oldid=1579078" இலிருந்து மீள்விக்கப்பட்டது