உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை கொள்கையில் வீறிய

அடிகளார்

119

மொழிஞாயிறு

பாவாணரும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் ‘உலகத் தமிழ்க் கழகம்' கண்டு சிற்றூர் பேரூரெல்லாம் பேரால மரமெனக் கால்கொள்ள வைத்து வளர்த்தனர். இவ்வியக்கச் செயலால் ‘மாறேம்' என்பாரும் மாறி வருதல் கண்கூடாகக் கண்டறிய வாய்க்கின்றது. மாறி நின்றோரும் மாறி நிற்கும் நிலைமையும் இல்லாமல் இல்லை!

L

ஒட்டு மொத்தப் பார்வையாகப் பார்த்தால் ஒருநிலைப் பாடான மொழியாக்கச் செயற்பாடு, வாழும் மக்கள் முயற்சியளவில் நின்றுவிடாது! ஆளும் அரசுக்கே பெரும்பங்கு உண்டு. ஆளும் அரசு, வாழும் அறிஞர் பெருமக்களை அவர்கள் வாழுங் காலத்திலேயே பயன்படுத்தி மொழியாக்கச் செயல்களை நிறைவேற்றுதல் வேண்டும்.

எந்த மண் எமக்கு ஆளுரிமை தந்ததோ அம்மண்ணின் மொழிக்கு வாழுரிமைச் செயல்களை யெல்லாம் செய்தே ஆவேம் என்னும் திண்ணிய நோக்கும், ஆக்கச் செயல்களும் தொடர்ந்து கிளர்ந்து நடைப்பட்டிருக்குமானால் அடிகளார் இயக்கம் தோன்றி எண்பான் ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் ஆட்சி மொழிச் சிக்கலோ, பயிற்று மொழிச் சிக்கலோ, வழிபாடு வழக்கு - இசை அறிவியல் என்பவற்றின் - நிலைமொழிச் சிக்கலோ இருக்க வாய்ப்பில்லையாம். அவ்வாய்ப்புகள் உண்டாதலே அடிகளார் மாண்பையும் கடைப்பிடிகளையும் உலகறியச் செய்யும் உயர்வினதாம்! இங்குக் குறிக்கப்பட்ட மாண்பு, மொழி பற்றியதே! அடிகளாரின் பல்துறையறிவும், சமயச் சீர்திருத்த நோக்கும், பிறவும் தனித்தனி மாண்பினவாம்.

-

இரா. இளங்குமரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/152&oldid=1579086" இலிருந்து மீள்விக்கப்பட்டது