உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மறைமலையம் – 9

தமிழ் இலக்கிய வானில் ஒரு வானவில்

இயற்கையின் எழிலில் இறைவனைக் கண்டு, அழகின் சிரிப்பில் மூழ்கி, கவிதை முத்துகளை எடுத்துத் தந்தவர், ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ் ஓர்த் (William Wordsworth), அவர், வேறு எந்தக் கவிஞரும் இயற்கை எழிலில் ஈடுபடாத அளவுக்கு ஈடுபட்டு அமுதக் கவிதைகளை இயற்றியதால் அவரை இயற்கைக் கவிஞர்' என்று புலமை உலகம் போற்றி வருகின்றது.

C

-

பலவகை வண்ண

அந்தக் கவிஞரின் உள்ளத்தை, கார் காலத்து வானில் தோன்றும் வானவில் பெரிதும் கவர்ந்துள்ளது. இயற்கையின் அற்புதப் படைப்பாக - மண்ணுலகையும் விண்ணுலகையும் ணைக்கின்ற வண்ண வளைவுப் பாலமாக மலர்களை நேர்வரிசையில் நிரல்பட அமைத்துக் கலையழகுடன் தொடுத்து வானில் தொங்கவிட்ட கதம்ப மாலையாக இன்பக் காட்சி வழங்கும் வானவில் இயற்கைக் கவிஞரைக் கவர்ந்ததில் வியப்பு ஒன்றுமில்லை! சின்னஞ்சிறிய வயதில் வானவில்லைக் கண்ட போதெல்லாம் கவிஞர் உள்ளம் துள்ளி விளையாடியது. வானவில் தந்த பேரின்பத்தைக் கவிஞர்

"My heart leaps up,

when I behold a Rainbow in the sky!"

என்று வியந்து பாடியுள்ளார். வாழ்நாள் முழுதும் அந்த இனிய நினைவே ஏற்பட வேண்டும் என்று விரும்பினார்.

மேலே

உள்ள

உள்ள கவிதை வரியில் உள்ள ஒவ்வொரு சொல்லிலும் கவிஞரின் உள்ளத்தில் வானவில் தந்த இன்பம் பொங்கி வழிகிறது. தமிழில் அந்த வரியைக் கீழே உள்ளவாறு மொழி பெயர்க்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/153&oldid=1579094" இலிருந்து மீள்விக்கப்பட்டது