உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

121

ரு

“என் உள்ளம் துள்ளிக் குதிக்கிறது, வானத்தில் ஒரு வானவில்லை நான் காணும் போதெல்லாம்!”

இந்தச் சொற்களைக் கொண்டு, வானவில்லால் ஏற்படும் இன்பம் எத்தகையது என்பதை உணரலாம்.

-

தமிழ் இலக்கிய வானத்தில் ஒரு வானவில் தோன்றி வண்ணம் குலையாமல் வடிவம் மாறாமல் - எளிதில் மறையாமல் நின்று நிலவி, தமிழ் மக்களை மகிழ்வித்து வருகின்றது.

அத்தகைய வானவில் எது?

மறைமலை அடிகள் என்ற இனிய பெயரை உடைய தமிழறிஞரே, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வானில் வானவில்லாய்த் தோன்றி அன்றும் இன்றும் மகிழ்வூட்டி வருகின்றார். இனியும் மகிழ்ச்சி தருவார்.

அடிகளாரை வானவில்லுடன் ஒப்புமைப் படுத்துவது எங்ஙனம் பொருந்தும்?

இந்த வினாவிற்கு உரிய விடையைச் சற்று விரிவாகவே கூறவேண்டியுள்ளது.

1.

வானவில்லில் உள்ள வண்ணங்கள் ஏழு.

அடிகளாரிடம் உள்ள திறன்கள் ஏழு.

2. மழைக்காலத்தில்

நீர்

காண்ட

முகிலை ஊடகமாக்கொண்டு நுழைகின்ற கதிரின் ஒளிக்கீற்று ஏழு வண்ணங்களாகப் பிரிந்து, அரை வட்டமாக அடிவானத்தில் வானவில்லாய்த் தோன்றுகிறது.

இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வானத்தில் புலமை முகிலின் ஊடே பாய்ந்து வெளிப்பட அடிகளின் அறிவுஒளி, ஏழு வகையான திறன்களுடன் வெளிப்பட்டுள்ளது.

3. கார்காலத்தில் கருமேகங்கள் ஒன்று சேர்ந்து மோதி, டிமின்னலுடன் பெருமழை பெய்து ஓய்ந்த பின்னர், அமைதி நிலவும் வானத்தில் மிதக்கின்ற சற்று வெளுத்த நீலமுகிலின் ஊடேபாயும் வெப்பம் குறைந்த கதிர் ஒளியின் வீச்சு, வானவில் தோன்றக் காரணமாய் உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/154&oldid=1579103" இலிருந்து மீள்விக்கப்பட்டது