உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

  • மறைமலையம் - 9

அதேபோல, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் வானில் திரண்டு எழுந்த புலமை முகில்கள் ஒன்றோடு ஒன்று மோதி மறுப்பு என்னும் இடியுடனும், ஆய்வின் தெளிவான முடிவு என்னும் மின்னொளியுடனும் தமிழ் மழை பெய்து ஓய்ந்த நிலையில், அமைதியான இலக்கிய வானில் வானவில்லாய்த் தோன்றினார் அடிகளார்.

ன்

எனவே, அடிகளாரை வானவில்லுடன் ஒப்பிட்டுக் காண்பது முற்றிலும் பொருத்தமானதாகும்.

இனி,

66

அடிகளாரிடம் அமைந்துள்ள ஏழு வகைத் திறன்கள் யாவை?” என்ற வினாவிற்கு விடை காண வேண்டும்.

அவரது ஏழுவகைத் திறன்களைக் கொண்டு அவரை ஏழுவகையாக அறிமுகப்படுத்தலாம்.

1. தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்துத் தலைவராய் விளங்கி வீறுகொண்டு நடந்து சென்ற பெருந்தமிழர்

2. சைவ சமயம் வீறுகொண்டு எழவும், விரைந்து வளரவும் ஓயாது உழைத்த சைவ சமயக் காவலர்.

3. தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய முப்பெரும் மொழிகளையும் கற்றுத் தேர்ந்த மும்மொழிப் புலமைச் செல்வர்.

4. பழந்தமிழ் நூல்களுக்குப் புது விளக்கம் கண்ட உரையாசிரியர்.

5. மும்மொழிப் புலமைத் திறனால் அரிய திறனாய்வுகளைச் செய்த ஆராய்ச்சி அறிஞர்.

6. வ

வடமொழியிலும் ஆங்கிலத்திலும் உள்ள சிறந்த நூல்களைத் தமிழாக்கம் செய்து புகழ்பெற்ற மொழி பெயர்ப்பாளர்.

7. தமிழில் உரைநடையின் வீறும் செழுமையும் முதிர்ச்சியும் குறையாமல் உரைநடை படைத்துக் கொண்டு புதிய அடிச்சுவடு பதித்த உரைநடை வல்லாளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/155&oldid=1579111" இலிருந்து மீள்விக்கப்பட்டது