உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

இந்த ஏழு திறன்களையும் ஒருங்கே

123

காண்ட

மறைமலைஅடிகளை, “இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வானில் அழகுடன் விளங்கும் வானவில்” என்று கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

அடிகளாரின் திறன்கள் இவை மட்டும் தானா?

விரிப்பின் பெருகும்!

தொகுப்பின் எஞ்சும்!

விரித்துப் பெருக்காமலும், தொகுத்து எஞ்ச விடாமலும் அடிகளாரின் திறன்களை, வானத்தில் பறக்கும் பருந்தின் பார்வை கொண்டு நோக்கி உணரவேண்டும் என்ற ஆர்வம் மிகுகின்றது.

அடிகளார், சிறந்த இதழாசிரியர்; இந்தி எதிர்ப்பின் முன்னணி வீரர்; உயர் சைவத்திற்கு மாறான கொள்கைகளை ஏற்காத பகுத்தறிவாளர்; சிறு தெய்வ வழிபாட்டைப் புறக்கணித்த சமயப் புரட்சியாளர்; வேளாளர் நாகரித்தை வெளிப்படுத்திய இனஎழுச்சியாளர்; சங்க இலக்கிய மாண்பை உணர்த்திப் பிற்கால இலக்கியத்தின் தாழ்வை இனம் காட்டிய மேதை; புலமைப் போர்களில் அஞ்சாது ஈடுபட்டு மறுப்புரையும் கண்டனமும் பெற்று, மறுப்புக்கு மறுப்பும் கண்டனத்திற்குக் கண்டனமும் எழுதி சட்ட வல்லுநர் போல் திகழ்ந்தவர்; மிகச்சிறந்த தமிழப் பேராசிரியர்; புலவர்கள் போற்ற வாழ்ந்த புலவர் ஏறு; ஆய்வரங்குகளின் ஒப்பற்ற தலைவர்; இலக்கியம், இலக்கணம், சமயம் ஆகிய துறைகள் மட்டுமே அல்லாமல், உணவு, உடல்நலம், மனவளம், வாழும் நெறி முதலியவற்றை ஆய்ந்து தெளிந்த அறிஞர்; கால ஆராய்ச்சியில் கால்வைத்துப் புதிய பாதை போட முயன்றவர்; ஆங்கிலத்தில் எழுதும் திறன் பெற்றவர்; புதியன படைக்க முயன்று, கடிதத்தின் வாயிலாகக் கதை நூலை உருவாக்கியவர்; தமக்கென்று தனித் தன்மை வாய்ந்த இல்லம் அமைத்துக் கொண்ட கட்டிடக் கலைஞர்; முத்து முத்தாய் எழுதும் எழுத்துக் கலைஞர்; நாள்தோறும் நாட்குறிப்பு எழுதிய மாமனிதர்; பெரிய நூலகத்தை உருவாக்கித் தந்தவர்; அறிஞர்களும் அரசியல் மேதைகளும் கவிஞர்களும் போற்றி மதிக்க வாழ்ந்தவர்; நடமாடும் பல்கலைக் கழகம் என்று அறிஞர்களால் பாராட்டப் பெற்றவர். வாழும் காலத்திலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/156&oldid=1579119" இலிருந்து மீள்விக்கப்பட்டது