உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

உரைப்பாயிரம்

கொழுஞ்சுவை கெழுமிய செழுந்தமிழ் வழக்கில் உரையும் பாட்டுமென இருதிறனுளவே, அவற்றுள் உரையெனப் படுவது வரையறை யின்மையின் சொற்பல வாகி நற்பொருள் விளக்கி

அறிவுநனி துலக்குங் குறியது வுடைத்தே; வாட்டமில் சிறப்பிற் பாட்டெனப் படுவது கரும்புகண் ணுடைத்த விரும்புபிழி யிறுக மூழையிற் றுழைஇத் தாழா தட்டோன் எரியகைந் தன்ன எழிற்பொற் பாண்டில் விளிம்புற நிறைத்தாங்கு முதுவாய்ப் புலவோன் பாவிடைச் சுருங்கிய பயங்கெழு சொல்லிற் கருதுதொறு மாழ்ந்த காழ்த்தபொருள் பொதிப்ப என்புநெக் குருகும் இசையுடன் றழீஇ இயற்கையின் வழாம லறிவொருங் குறுத்தி இன்புணர் வெடுப்பி யன்பே யுருவாம் முழுமுதற் பொருளொடுங் கெழுவிடப் பயக்கும் ஆனாத் தலைமைப் பான்மைய துடைத்தே; இத்தகு சிறப்பின் நற்றமிழ்ப் பாக்கள்

பின்றைநாட் காண்டல் பெரிதரி தாயினும்

பண்டைக் காலத்துப் பழுத்தறிவு மாண்ட நல்லிசைப் புலவோர் நயமுறக் கிளந்த முதிர்கட லெக்கர் மணலினும் பலவே; அவற்றுள்,

ஒம்பா தொழிந்தன போக நாம்பெற

இற்றைநாட் போந்த முற்றுதமிழ்ப் பாவுள்

முருகுமுத னிறுத்த அரியன பத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/160&oldid=1579153" இலிருந்து மீள்விக்கப்பட்டது