உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மறைமலையம் - 9

வையாது ‘வாரிருங்கூந்தல்' என்பவற்றை மாத்திரம் இடையில் வக்க வேண்டிற்றென்னையெனின்; தன் மருங்கிருந்து 'காதற்கொழுநன் பிரிவனோ' என ஐயுற்று ஆற்றாளாம் தன் மனையாள் ஐயந்தீர்த்து அவளைத் தேற்றுத லுறுவான் 'வேலினும் வெய்யகானம்' என்பதனை முதலிற் சொல்வனாயின் ‘என் காதலன் என்னை இங்கே விடுத்து ‘இப்பெற்றித்தாங் கானத்திலே போயின் எவ்விடர் நேருமோ' என மேலுமேலும் ஆற்றாமைமிக்கு வருந்துவளாகலின் அதனை முதற்கட் கூறப்பெறான்; மற்று 'இவளைப் பிரிந்து வாரேன்' என்பதனை முதற்கணுரைப்பின் அது கேட்ட துணையானே இவள் ஆற்றாமை நீங்கி இன்புறுவளாகலின் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே" என்பதனையே ஆண்டிடைக்கட்படுத்துக் கூறினார் ஆசிரியர் என்க. அல்லதூஉம் காவிரிப்பூம்பட்டினம் என்னும் புறஇடத்தைக் கூறியவுடனே அகவிடத்தைக் கூறுதலே பொருத்தமுடைத்தாகலானும் அவ்வாறதனை முன்வைத்தாரென்க.

66

இனிக் காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய ஆசிரியர் அதன்கட் செங்கோலோச்சும் அரசன் கரிகாற் பெரு வளத்தானையுங் கூறல்வேண்டுவது மரபாகலின் இடையில் நிறுத்திய அகப்பொருட்டுறைக்கும் அத்துறை முடிவாய் இறுதியில்நின்ற அடிகட்கும் இடையே யுள்ள சந்துவா யறிந்து அதன்கண் அவ் வரசன் வலத்தைச் சிறந்தெடுத்துக்கூறி இறுதியில்நின்ற அகப்பொருளோடு இயைபுபடுத்து வாராயினர். இங்ஙனமெல்லாம் செய்யுளியற்றும் நுட்பம் முற்றுமுணர்ந் திதனை அமைத்த இவ்வாசிரியர் உருத்திரங் கண்ணனார் நுட்பவினைத்திறன் ‘முல்லைப்பாட்டு' இயற்றிய ஆசிரியர் நப்பூதனார் நுட்பவினைத்திறத்தோடு ஒப்புமைபெற்று விளங்கித் தோன்றுதல் காண்க.

அடிக்குறிப்பு

1. Psychological researches.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/175&oldid=1579278" இலிருந்து மீள்விக்கப்பட்டது