உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

141

கோக்கிய, வேலினும் வெய்ய கானமவன், கோலினுந் தண்ணிய தட -மென் றோளே' என்பதே இப்பாட்டின் முதற்கண் வரற்பாலதா லெனின்; புறப்பொருளை முற்கூறி அவ்வாற்றால் அறிவை இழுத்துச் சென்றே அகப்பொருட்கட் பதிய வைத்தல் வேண்டுமாகலானும், 'பட்டினப்பாலை' என்னுமிதன் பெயர்க்கேற்ப முதலிற் பட்டினத்தின் சிறப்பைக் கூறிவைத்து அதன்பின்னே பாலை யொழுக்கங் கூறல் வேண்டுமாகாலானும் முதலிரு நூற்றுப் பதினெட்டு அடிகள் காறும் காவிரிப்பூம்பட்டினச் சிறப்பையே கூறுவாராயினர். அற்றேல், இடையிற்கூறிய “வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே” என்னு மிவ்வகப் பொருளடிகளிரண்டையும் இறுதியில் நின்ற 'வேலினம் வெய்ய கானம்` என்பதனோடு சேர்த்துக் கூறுதலே அமையும்; என்னை?

அடிகளும்

முதல் இருநூற்றுத் தொண்ணூாற்றேழ் புறப்பொருளே இடையறாது கூறி மற்றை அகப்பொருளெல்லாம் ஏனை நான்கடியாற் கூறி முடிப்பது பொருந்துமாகலின் எனின்; அற்றன்று; முழுவதூஉம் புறப்பொருளே கூறிச்செல்லிற் பயில் வோருணர்வு சலிப்படையுமாகலானும், இவ்வுடம்பு உளதாங் காறும் புறப்பொருள் வழிச்சென்று மடங்கி அகத்தே குவிந்த அறிவு அவ்வகமுகமாயே யொழியாது திரும்பவும் புறம்படக் காண்டு மாகலானும், புறப்பொருளெல்லாஞ் சொல்லிக் கொண்டுபோய் இறுதியில் மாத்திரம் அகப்பொருட்டுறை யுரைப்பின் புறத்தே சென்று மடங்கி அகத்தே போய்க் குவிந்த அறிவு மறித்தும் புறம்படாதுபோலு மெனப்பட்டு இயற்கை யொடு முரணுமாதலானும், காவிரிப்பூம்பட்டினச் சிறப்புக் கூறியபின் அவ்வகப்பொருளைப் செய்து முன்னிரண்டடியை இடையே வைத்தும் பின்னிரண்டடியை இறுதியில் வைத்தும் இவற்றின் நடுவே கரிகாற் பெருவளத்தான் வெற்றித்திறம் விளம்பியும் சென்றால் முதற்கட் புறத்துரு வழிச்சென்று அகத்தடங்கிய அறிவு பின்னும் புறம்பட்டுப் போய்ப் பெயர்த்தும் அகத்தடங்கி இங்ஙனம் இயங்கப்பெறு மியல்பினதென்னும் மக்கள் மனவுண்மை நன்கறியக் கிடக்கு மாகலானும், அகப்பொருளடி நான்கனையும் ஒரு சேர இறுதியில் நிறுத்திக் கூற ஒருப்பட்டிலராய் இடையிலிரண்டும் இறுதி யிலிரண்டுமாக வைத்தருளினாரென்க. அற்றேல், 'வேலினும் வெய்ய' என்னும் இறுதியிரண்டடியினையும் இடை

பிளவு

யில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/174&oldid=1579269" இலிருந்து மீள்விக்கப்பட்டது