உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

  • மறைமலையம் – 9

வேறின்றாம்; பின் அதுசெல்லுமாறெல்லாம் விடுத்து அது வலிகுன்றி அயர்ந்த துணையானே அஃது எளிதிலே பாகன் வயப்படுமாகலின், அப் பிற்பொழுதே அதனை யாளுதற்குரிய காலமாம். அதுபோல் உலகியற் பொருள்களில் வரம்பின்றியே சென்று சென்று பழக்கம் முதிர்ந்த நம்மறிவானது, அவற்றுட் சிறந்தன சிலவற்றைப் பற்றுமாறு செயப்பட்ட மாத்திரையானே அஃது அப் பழக்கந் தவிர்ந்து அகமுகப்பட்டு ஒருங்குங்கால் அதற்கு ஆற்றல் சிறிதேயாகலின் அதனா லப்போது பற்றப்படும் அகப்பொரு ளொழுக்கத்தை “வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே” என இரண்டடியான் மாத்திரம் மிகச் சுருக்கிக் கூறிய இவ்வாசிரியர் நுட்ப வறிவின் வன்மைமையை என்னென்பேம்!

ம்

இப்பட்டினப்பாலை முழுவதூஉம் முந்நூற்றோரடிகளா னமைக்கப்பட்டிருக்கின்றது. இவற்றுள் இரு நூற்றுத் தொண்ணூாற் றேழடிகளிற் புறப்பொருள் விரிவும் ஏனை நான்கடிகளில் மாத்திரம் அகப்பொருட் சுருக்கமும் சொல்ல ப்பட்டிருக்கின்றன. இவ்வாறே திருமுருகாற்றுப்படை முதலிய செய்யுட்களினும் புறப்பொருட் சிறப்பே பெரும்பான்மையாற் கூறிவைத்து ஏனை அகவுணர்வின் றிறனெல்லாம் மிகச் சுருங்கவே சால்லப்பட்ட ன. புறத்தே விரிந்த அறிவெல்லாம் முறைமுறையே சுருக்கப்பட்டு அகத்தே செல்வுழி அஃதொன்றின் மாத்திரமே உறைந்து நிற்றலிற் புறப்பொருள்வழி வைத்து விளக்கப்படும் அகப்பொருளெல்லாம் மிகச் சுருக்கிக் கூறுதலே மனவியற்கைக்கு இயைந்ததாம். இந் நுட்பஞ் செவ்விதி னறிந்த ருத்திரங்கண்ணனாரது அறிவின் மாட்சி அளவிடற் பாற்றன்று.

னிக், “கரிகாற் பெருவளத்தான் பகைவர்மேலோச்சிய வேலைக்காட்டினும் யான் செல்ல விரும்பிய கானம் மிகவுங் கொடுமையாய் இராநிற்ப, இவள் அகன்ற மென்றோளோ அவன் செங்கோலினுங் குளிர்ந்திருக்கின்றன வாகலின், ஏ நெஞ்சமே! என் காதலி

இங்கே தனியளாயிருப்ப யான் காவிரிப்பூம் பட்டினத்தையே பரிசிலாகப் பெறுவேனாயினும் இவளைப் பிரிந்துவருவதற்கு ஒருப்படேன்.” என்று தன் காதலியைப் பிரிந்து போதற் கெழுந்த தலைமகன் பின் அவளைப் பிரியமாட்டானாய்த் தன் நெஞ்சை நோக்கிக் கூறியதாக இச்செய்யுள் உருத்திரங் கண்ணனாரா லியற்றப்பட்டது. இதில் ‘திருமாவளவன் றெவ்வர்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/173&oldid=1579261" இலிருந்து மீள்விக்கப்பட்டது