உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

மிகவல்லவராய்

139

விளங்கும்

ஓவியமெழுதுதலில் இரவிவன்மர் எழுதிய ஓவியங்கள் எத்துணை நுட்பமாய் உருவவுண்மையியல் வழாமல் விளங்குகின்றன! பார்மின்! கானகத்தே சகுந்தலை துஷியந்த அரசன் மேற்கொண்ட காதல்வெப்பம் பொறாளாய்ப் பிரியம்வதை, அனசூயை என்னுந் தன்றோழிமா ரிருவருந் தன்னிருமருங்குமிருப்ப மலர்ப்பாயலிற் படுத்தவண்ணமே தன் காதலை அறிவித்துத் தாமரையிலையில் ஒரு செய்யுள் எழுதுதற்குக் கையில் எழுதுகோல் ஏந்தியபடியே ஒரு புருவம் மேல் நெறியக் கவியை நினைத்தலும், அவள் பக்கலிற் பசுத்து அடர்ந்திருக்கும் புன்மேற் பூக்கள் இறைந்து கிடத்தலும், பின்னே ஒரு மான் இவர்களைத் திரும்பிப் பார்த்த வண்ணமாய் நிற்றலும், பருத்துயர்ந்த மரங்கள் மிகநெருங்கித் தண்ணிழல் பயந்து நிற்றலும், வலப்பக்கத்திருக்கும் தோழி பக்கத்தே தண்ணீர்க்குடம் ஒன்று நிற்கப் பிறிதொன்று சாய்ந்து கிடத்தலும், அத் தோழிமார் எடுத்துவந்த பூங்கூடைகளில் உருகெழு மருமலர் நிரம்பியிருத்தலும் பிறவும் இயற்கை மாறுபடாமல் எவ்வளவு உண்மையாய் எழுதப்பட்டிருக் கின்றன! இவ்வாறுண்மைவழுவா தெழுதப்பட்ட அவ்வோவியத்தை நோக்குந்தோறும் நம்மறிவு அதன் வயப்பட்டு நின்று, இன்பம் பயத்தல் காண்டுமன்றே? இதுபோல நல்லிசைப் புலவரும், ஒருநிலையின்றி யோடும் நமதறிவை ஒர் ஒழுங்கு படுத்தற் பொருட்டு அவ்வறிவு பற்றிச் செல்கின்ற உலகியற் பொருள்களில் அழகு மலிந்து விளங்குவனவற்றை அவை விளங்குமாறே விரித்துக் கூறி அவ்விரிந்த அறிவைச் சிறிது சிறிதே சுருக்கிக் கொண்டு போய் அகமுகப்படுத்தி உணர்வெழச் செய்து இன்பத்தின்கண் இருத்துவர்.

இங்கே ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் புறப்பொருளில் வரையறையின்றிச் செல்லும் நம்மறிவை மடக்கி நிறுத்துதற் பொருட்டு அப் புறப்பொருள்களுள் மிக்க அழகும் வளனும் நிரம்பித் தோன்றும் காவிரிப்பூம்பட்டினத்தை முதலிருநூற்றுப் பதினெட்டு அடிகள் காறும் உண்மை வழாது விரித்து அழகுபெறச் கூறுதல் பெரிதும் பாராட்டற் பாலதொன்றாம். பாகன் வயப்படாது கலினத்தை அறுத்துக்கொண்டு மிக விரைந்துபோம் புரவியை அப்பொழுதே பிடித்து நிறுத்த முயல்வான் அது கூடாமையின் தானிடர்ப்படுமேயல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/172&oldid=1579253" இலிருந்து மீள்விக்கப்பட்டது