உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை 175. மிசைக்கூம்பி னசைக்கொடியு

மீன்றடிந்து விடக்கறுத்

தூன்பொரிக்கு மொலிமுன்றின் மணற்குவைஇ மலர்சிதறிப் பலர்புகுமனைப் பலிப்புதவி

180. னறவு நொடைக் கொடியோடு பிறபிறவு நனிவிரைஇப் பல்வே றுருவிற் பதாகை நீழற்

செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற் செல்லா நல்லிசை யமரர் காப்பி

185. னீரின் வந்த நிமிர்பரிப் புரவியுங் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமமைப் பிறந்த மணியும் பொன்னுங் குடமலைப் பிறந்த வாரமு மகிலுந் தென்கடன் முத்துங் குணகுடற் றுகிருங்

190. கங்கை வாரியுங் காவிரிப் பயனு மீழத் துணவுங் காழகத் தாக்கமு மரியவும் பெரியவு நெளிய வீண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின் நீர்நாப் பண்ணு நிலத்தின் மேலு

195. மேமாப்ப வினிதுதுஞ்சிக் கிளைகலித்துப் பகைபேணாது வலைஞர்முன்றின் மீன்பிறழவும் விலைஞர்குரம்பை மாவீண்டவுங் கொலைகடிந்துங் களவுநீக்கியு

200. மமரர்ப் பேணியு மாவுதி யருத்தியு

நல்லானொடு பகடோம்பியு

நான்மறையோர் புகழ்பரப்பியும்

பண்ணிய மட்டியும் பசும்பதங் கொடுத்தும் புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்

149

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/182&oldid=1579336" இலிருந்து மீள்விக்கப்பட்டது