உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மறைமலையம் – 9

145 மழைதோயு முயர்மாடத்துச்

சேவடிச் செறிகுறங்கிற்

பாசிழைப் பகட்டல்குற்

றூசுடைத் துகிர்மேனி

மயிலியன் மானோக்கிற்

150. கிளிமழலை மென்சாயலோர் வளிநுழையும் வாய்பொருந்தி

யோங்குவரை மருங்கி னுண்டா துறைக்குங் காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்

155. வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்

குழலகவ யாழ்முரல

முழவதிர முரசியம்ப

விழவறா வியலாவணத்து

மையறு சிறப்பிற் றெய்வஞ் சேர்த்திய

160. மலரணி வாயிற் பலர்தொழு கொடியும் வருபுன றந்த வெண்மணற் கான்யாற் றுருகெழு கரும்பி னொண்பூப் போலக் கூழுடைக் கொழுமஞ்சிகைத் தாழுடைத் தண்பணியத்து10

165. வாலரிசிப் பலிசிதறிப் பாகுகுத்த பசுமெழுக்கிற் காழூன்றிய கவிகிடுகின் மேலூன்றிய துகிற்கொடியும் பல்கேள்வித் துறைபோகிய

170. தொல்லாணை நல்லாசிரிய

.9

ருறழ்குறித் தெடுத்த வுருகெழு கொடியும்

வெளிலிளக்குங் களிறுபோலத்

தீம்புகார்த் திரைமுன் றுரைத்

தூங்குநாவாய் துவன்றிருக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/181&oldid=1579328" இலிருந்து மீள்விக்கப்பட்டது