உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை 235. வேறுபல் பூளையோ டுழிஞை சூடிப்

பேய்க்க ணன்ன பிளிறுகடி முரச

மாக்க ணகலறை யதிர்வன முழங்க முனைகெடச் சென்று முன்சம முருக்கித் தலைதவச் சென்று தண்பணை யெடுப்பி 240. வெண்பூக் கரும்பொடு செந்நெ னீடி மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக் கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக் கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச் செறுவும் வாவியு மயங்கி நீரற்

245. றறுகோட்டி டிரலையொடு மான்பிணை யுகளவுங் கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி

யந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ வம்பலர் சேக்குங் கலந்துடைப் பொதியிற்

250. பருநிலை நெடுந்தூ ணொல்கத் தீண்டிப் பெருநல் யானையொடு பிடிபுணர்ந்த துறையவு மருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின் முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த திரிபுர நரம்பின் றீந்தொடை யோர்க்கும்

255. பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துச் சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி யழல்வா யோரி யஞ்சுவரக் கதிர்ப்பவு மழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவுங் கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப் 260. பிணந்தின் யாக்கைப் பேய்மக டுவன்றவுங் கொடுங்கான் மாடத்து நெடுங்கடைத் துவன்றி விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டி லொண்சுவர் நல்லி லுயர்திணை யிருந்து பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த்

151

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/184&oldid=1579357" இலிருந்து மீள்விக்கப்பட்டது