உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் - 9

265. தொடுதோ லடியர் துடிபடக் குழீஇக் கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட வுணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து வளைவாய்க் கூகை நண்பகற் குழறவு மருங்கடி வரைப்பி னூர்கவி னழியப்

270. பெரும்பாழ் செய்து மமையான் மருங்கற மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத் தான்முன்னிய துறைபோகலிற்

பல்லொளியர் பணிபொடுங்கத்

275. தொல்லருவாளர் தொழில்கேட்ப வடவர் வாடக் குடவர் கூம்பத் தென்னவன் றிறல்கெடச் சீறி மன்னர் மன்னெயில் கதுவு மதனுடை நோன்றாண் மாத்தானை மறமொய்ம்பிற்

280. செங்கண்ணாற் செயிர்த்து நோக்கிப் புன்பொதுவர் வழிபொன்ற

விருங்கோவேண் மருங்குசாயக்

காடுகொன்று நாடாக்கிக்

குளங்தொட்டு வளம்பெருக்கிப்

285. பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக்

கோயிலொடு குடிநிறீஇ

வாயிலொடு புழையமைத்து ஞாயிறொறும் புதைநிறீஇப்

பொருவேமெனப் பெயர்கொடுத்

290. தொருவேமெனப் புறக்கொடாது திருநிலைஇய பெருமன்னெயின் மின்னொளி யெறிப்பத் தம்மொளி மழுங்கி விசிபிணி முழவின் வேந்தர் சூடிய பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்காற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/185&oldid=1579365" இலிருந்து மீள்விக்கப்பட்டது