உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

7. ஆக்கியோன் வரலாறு

இனி வ்வருமைத் திருப்பாட்டை அருளிச் செய்த நல்லிசைப் புலவரான உருத்திரங்கண்ணனார் கடியலூரிற் பிறந்தவரென்பது இவர் பெயர் அவ்வூர்ப் பெயரொடு புணர்த்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்று வழங்குமாற்றால் அறியப்படும். இவர் பண்டைக்காலந் தமிழ்மக்களில் அந்தணர் குடிக்கு உரியாரென்பது, தொல்காப்பியம் மரபியலிற் பேராசிரியர் “ஊரும் பெயருமுடைத் தொழிற் கருவியும், யாழுஞ் சார்த்தி யவையவை பெறுமே” என்னுஞ் சூத்திரவுரையில் ஞ் உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகன், கடியலூர் உருத்திரங்கண்ணன் என்பன அந்தணர்க்குரியன' என்று உரை கூறியவற்றால் தெளியப்படும்.

வர்ை

""

இனி, இவர் இன்ன சமயத்தைக் கைக்கொண்டு ஒழுகினா ரென்பது செவ்வனே பெறப்படவில்லை. இவ்வாசிரியர் தாம் இயற்றிய பெரும்பாணாற்றுப்படையில் “காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப்,பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண் என்று கூறினாராகலின் இவர் வைணவ சமயத்தைப் பின்பற்றி ஒழுகினா ரென்னாமோ எனின்; காஞ்சி நகரத்திற் செங்கோல் ஒச்சிய தொண்டைமான் இளந்திரையன் என்னும் வேந்தன்பாற் சென்று பரிசில் பெறும்படி பாணரை ஏவிப் பாடுமிடத்து, அவன் அரசு வீற்றிருந்த அக் கச்சி நகரத்தில் திருக்கோயில் கொண்ட திருமாலையும் வழிபட்டுச் சென்மின் என்று அப்பாணரை நோக்கிக் கூறியதன்றி, இவர் திருமாலை வழிபட்டு வந்தன ரென்பது அதனாற் சிறிதும் பெறப்படாமையின் அங்ஙனங் கூறுதல் பொருந்தா வுரையாமென்க. அக் கக்சி நகரத்திற் சிவபிரான் கோயிலும் இருப்ப அதனை விடுத்துத் திருமால் கோயிலையே இவர் மிக்கெடுத்துக் கூறியவாறென்னை யெனின்; தொண்டைமான் இளந்திரையன் என்னும் அச் சோழ மன்னன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/205&oldid=1579432" இலிருந்து மீள்விக்கப்பட்டது