உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

6. பாட்டின் வரலாறு

இனி, இப் பாட்டின் வர லாற்றைப் பின்வருமாறு உய்த்துணர்ந்துகாட்டல் இழுக்காது. இதனை யியற்றிய நல்லிசைப் புலவரான உருத்திரங்கண்ணனார் தம் ஆருயிர்க் காதலியொடு மருவியிருந்து இல்லறம் நடாத்துகின்றுழி அவர் தமக்குள்ள பொருள்வளஞ் சுருங்க வறுமை வந்து நலிவதாயிற்று. அவ் வறுமை நோயினைக் களைந்து விருந்தோம்பி வாழ்தற்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருள் பெறற் பொருட்டுக் கரிகாற்சோழனிடத்துப் போதற்குக் கருதினார். அக் கருத்தறிந்த அவர் அருமை மனைவியார் அவரைப் பிரிதற்குச் சிறிதும் பொருந்தாராய் வருந்தினார். அவ் வருத்தங்கண்டு பிரிதலைத் தவிர்ந்த அவ்வாசிரியர் தாம் கரிகாற்சோழன்பாற் போதற்குக் கருதினமையும், அது தெரிந்து தன் மனைவி வருந்தினமையும், அவள் ஆற்றாமையினைத் தணித்துப் பின் ஒருகாற் பிரிதற் பொருட்டுப் போகாது தவிர்ந்தமையும் இனிது விளங்க நலமுறவுரைத்துத், தாம் சோழ வேந்தனிடத்துப் பரிசில் பெறவேண்டினமையும் “முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்” எனக் குறிப்பால் அறிவித்து, அக்கரிகாற்சோழ மன்னற்குரிய அரிய பெரிய வெற்றித் திறங்களெல்லாம் நடந்தவாறே மொழிந்து இவ்வருமைத் திருப்பாட்டை அருளிச் செய்தனர். இங்ஙனம் இயற்றிய இவ்வருந்தமிழ்ச் செய்யுளைப் பின்னொருகால் இவர் அச் சோழ ாழ வேந்தன்பாற் சென்று காட்ட அவன் இவர் செய்யுளின் சொற்சுவை பொருட்சுவைகளை மிக வியந்து இவர்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசிலாக வழங்கிச் சிறப்புச் செய்தான்; இது தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன் பத்தொடாறு நூறாயிரம் பெறப், பண்டு பட்டினப் பாலைகொண்டதும்” என்னுங் கலிங்கத்துப்பரணிச் செய்யுளால் அறியப்படும்.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/204&oldid=1579429" இலிருந்து மீள்விக்கப்பட்டது