உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

8. பாட்டுடைத் தலைவன்

இனி இப்பாட்டுடைத் தலைவனான சோழன் கரிகாற் பெருவளவன் இற்றைக்கு ஆயிரத்துத்தொளாயி

ஆண்டு

களுக்கு முன் சோழநாட்டின் தலைநகரான காவிரிப் பூம்பட்டினத்திற் செங்கோலோச்சினான். இவன் கிறித்து பிறந்த முதல் நூற்றாண்டின்கண் அரசுரிமை பெறலாயினானென்பதும், மதுரை மாநகரிற் கடைச்சங்கமும் இவன் காலத்தேதான் நிரம்பப் பொலிவு பெற்றிருந்த தென்பதும் யாம் எழுதிய மாணிக்கவாசகர் காலம் என்னும் நூலில் இனிது விளங்க விரித்துக் காட்டப் பட்டன. அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது வரம்பின்றி விரியுமாகலின் ஆண்டுக் கண்டுகொள்க. கடைச் சங்கத்தாராற் றொகுக்கப்பட்ட பத்துப்பாட்டுகளில் இரண்டு பாட்டுகள் இயற்றிய ஆசிரியர் உருத்திரங்கண்ணனாரும் ஆயிரத்துத் தொளாயிர ஆண்டுகளுக்கு வரென்பதும் இதனால் விளங்கற் பாலதே யாம்.

.

முற்பட்ட

இனி, இச் சோழமன்னன் தான் இளைஞனா யிருந்த காலத்துப் பகைவராற் பற்றப்பட்டுச் சிறைக்களத்தேயிடப் பட்ட ானென்பதூஉம், பின் அச் சிறைக்களத்தினின்றுந் தப்பிப் போய்த் தன் அரசுரிமையினை எய்திப் பின்பு அப்பகைவர்மேற் படையெடுத்துச் சென்று அவரை யெல்லாம் வென்றா னென்பதூஉம் இப் பட்டினப் பாலையின் இறுதிப் பகுதியால் நன்கு புலப்படுகின்றன.

இன்னும் இவன் இளைஞனாயிருந்தபோது ஒருகால் இவன் பகைவர் இவனைக்கொல்லும்பொருட்டு இவனிருந்த இல்லத்தைத் தீக்கொளுவ, இவன் அதற்கு அஞ்சாது அத்தீயினடுவே போய் அப்பாற்பட்டு உயிர் பிழைத்தானென்பதும், அங்ஙனம் அத் தீயைக் கடந்து செல்லுங்கால் இவன் கால் கரிந்துபோயினமை பற்றியே இவன் கரிகாற் சோழனென்னும் பயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/207&oldid=1579437" இலிருந்து மீள்விக்கப்பட்டது