உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

175

றுவானாயின னென்பதும், இவன் தன் அரசுரிமையினை எய்துங்கால் இவன்றன் அம்மானான இரும்பிடர்த்தலையார் என்னும் நல்லிசைப் புலவர் இவற்குப் பெருந்துணையாயிருந்தன ரென்பதும், இவன் சேரமான் பெருஞ்சேரலாதனொடு வெண்ணி யென்னும் ஊர்ப்புறத்தே போர்செய்து வெற்றிகொண்டா னென்பதும், அங்ஙனம் போரியற்றுங்கால் அச் சேரலாதனுக்குத் துணையாய்வந்த பாண்டியன் ஒருவனையுந் தோல்வி பெறச் செய்தானென்பதும், பின்னொருகால் இமயமலை வரையிற் சென்று ஆரியவரசரை யெல்லாம் வென்று அம்மலைக் குவட்டின்மேல் தன் புலிக்கொடியை நாட்டினா னென்பதும், ருங்கோ வேளின் வழிவந்த சுற்றத்தார்க்கு இவன் பெரும் பகைவனென்பதும், இவன் தமிழ்ப்புலவர்களை மிகவும் பாதுகாத்து வந்தமையால் அவர்களாற் பெரிதும் நன்கு L மதிக்கப்பட்டு வந்தானென்பதும் பழமொழி, பொருநராற்றுப்

படை,

புறநானூறு முதலிய நூல்களால் இனிது

விளங்குகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/208&oldid=1579439" இலிருந்து மீள்விக்கப்பட்டது