உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

9. பாட்டின் நலம் வியத்தல்

னி, இப்பாட்டின்கண் உள்ள உள்ள பொருளமைதியின் நலத்தைச் சிறிது ஆராய்வாம். ஒருபாட்டின்கண் அமைந்த பொருளுக்கும் அதனைவிட்டுத் தனியே கிடந்த பொருளுக்கும் வேறுபாடு பெரிதாம். தனியே கிடந்த பொருள் அறிவுக்குப் புலப்படும் அவ்வளவேயன்றி வேறு இன்பம் பயப்பதன்றாம். பாட்டின்கண் அமைந்த பொருளோ அறிவிற்குப் புலப்படுவதுடன் நம் மனநினைவின் உணர்ச்சியை எழுவித்து இன்பம் பயப்பதொன்றாம். திங்கள் வானில் விளங்குகின்றதென்று ஒருவன் உரைத்தால் அவ்வுரை நம் அறிவுக்கு ஓருண்மையை அறிவிக்கும் அவ்வளவேயன்றி அதன்மேற் றருவது சிறிதுமில்லை யன்றோ? அவ்வாறன்றிக்,

"கொழுந்தா ரகைமுகை கொண்டலம் பாசடை விண்மடுவில்,

எழுந்தார் மதிக்கமலம் எழில்தந்தென.'

என்னுந் திருச்சிற்றம்பலக் கோவையார் திருப்பாட்டை ஒருவர் உரைப்பக் கேட்டால், ‘விரிந்த நீலவானம் என்னும் நீர்மடுவில் முகிற்குழாமாகிய பச்சிலை பரவியிருப்ப இடையிடையே வான்மீன்களாகிய வெண்டாமரை முகைகள் நிறைந்து விளங்க அவற்றின் நடுவில் முழு வெண்டிங்களாகிய ஒரு வெண்டாமரை அலர்ந்து அழகுடைத்தாய்த் தோன்றுகின்றது' என்னும் அச்செய்யுட்பொருள் நம் அறிவுக்குப் புலனாதலொடு நம் L மனநினைவின் உணர்வினையும் எழுவித்து இன்பந்தருதல் கண்டாமன்றோ? மற்று இங்ஙனம் இன்பம் பயத்தால் அச்செய்யுட்பொருளுக்கு மட்டும் எவ்வாறு பொருந்து வதாயிற்று என்று நுணுகிப்பார்க்குமிடத்து, இராக்காலத்தே முழுநிலவுடன் காணப்பட்ட அவ் வானின் தோற்றத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/209&oldid=1579441" இலிருந்து மீள்விக்கப்பட்டது