உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

177

நிலத்தின்கண்ணுள்ள ஒரு மடுவின் றோற்றத்தோடு ஒப்பதாக வைத்துக் காட்டினமையால் அதற்கு அவ்வின்பம் விளைக்கும் ஆற்றல் பொருந்தலாயிற்றென்பது நன்கு புலனாம். ஆகவே, பாட்டின்கட் சொல்லப்படும் பொருளுக்கு இசைந்த வேறொரு தோற்றத்தினை எழுப்புதல் செய்யுளியற்றும் நல்லிசைப் புலவர்க்கு மட்டும் வாய்ந்ததொரு திறமாம். இங்ஙனம் அவர் செய்யும் செய்கைத்திறத்தினையே இலக்கண நூலார், உவமை, உருவகம் என வேறுபெயரிட்டு வழங்குவர். பொருள்களைக் கிடந்தவாறே சொல்லிக் கொண்டுபோம் நெறி தன்மைநவிற்சி எனவும், அங்ஙனஞ் சொல்லிப் போதற்கு இடையிடையே உணர்வு சலியாமைப் பொருட்டுச் சுவை வேறுபடுத்தி அப்பொருளோடு இயைந்த பிறபொருட் டோற்றத்தை எழுப்புநெறி உவமை, உருவகம் எனவும் பெயர்பெறா நிற்கும்.

இன்னும் இவ்வுவமை உருவகம் முதலியவற்றின் வேறாகப் பிறர் ஆயிரம் புனைந்துரைகள் கூறினாராயினும் அவையெல்லாம் இவ்வுவமை உருவகம் என்னும் இரண்டிலே யடங்கும். தம்மாற் கூறப்படும் பொருள்களின் வழியே அறிவு செல்லுங்காற், புலவர்க்கு இயற்கையாய்த் தோன்றும் ஒப்புமைகள் உவமை உருவகம் என்னும் இவ்விரண்டே யாகலின், இவ்வியற்கை நெறி திறம்பி மிகவும் இடர்ப்பட்டுப் பலப்பலவான புனைந்துரைக ளெல்லாம் அமைத்துப் பொருளுண்மை திரித்துக் கற்பார்தம் மன உணர்வைச் சிதைக்கும் பிறரெல்லாம் புலவரெனப் படுதற்குச் சிறிதும் உரியர் ஆகார் என்பதூஉம், அவரான் அமைக்கப்படும் அவ்வணிகளெல்லாம் வெற்றாரவார வெறும் போலிகளேயா மென்பதூஉம் உண்மை யறிவுடையார்க்கெல்லாம் இனிது

விளங்கற்பாலனவேயாம். இவ்வுண்மை கடைப்பிடித்தன்றே ஒப்புயர் வில்லாச் செந்நாவன்மைச் செவ்வறிவுத் தெய்வப் பெற்றியாளரான ஆசிரியர் தொல்காப்பியனார் பொருளதி காரத்துள் உவமவியல் என ஒன்றே வகுத்து உவமம் ஒன்றையே அணிந்துரையாக வத்து விளக்கினார். இத் தெய்வ சிரியரொடு திறம்பிப் பிறர் தமக்கு வேண்டியவாறெல்லாம் அணிகளைப் பெருக்கி எழுதினாராயினும் அவையெல்லாந் தொல்காப்பியத்தின் முன் தலைதூக்கமாட்டாவா யொழிதல்

காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/210&oldid=1579444" இலிருந்து மீள்விக்கப்பட்டது