உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

மறைமலையம் – 9

இனிப் பட்டினப்பாலை யென்னும் இவ்வருமருந்தன்ன நூலை எழுதிய உருத்திரங்கண்ணனார் என்னும் நல்லிசைப் புலவர் இதன்கண் இருபது உவமைகள் காட்டியிருகின்றார். இவ்வுவமைகளை ஓரிடத்து ஒருசேரக் கூறாது பொருள்களைக் கிடந்தவாறே சொல்லிக் கொண்டு போம்வழி இடையிடையே சுவை வேறுபடுத்திக் கற்பார்க்கு உணர்வெழுச்சி உண்டாமாறு அவை தம்மை ஊடே ஊடே இனிதமைத்திடுகின்றார். உருத்திரங் கண்ணனாரும் பொருள்களைக் கிடந்தவாறே கூறினராயின், அதனான் மன உணர்வினைக் கவர்தல் ஏலாதாலெனின்; அற்றன்று; உலகியற் பொருள்களில் இயற்கையழகுள்ளனவும் அஃதில்லனவுமென இரு பாலன உள. ஆசிரியர் உருத்திரங் கண்ணனார் இச்செய்யுட்கண் உலகியற் பொருள்களில் அழகாற் சிறந்து மக்கள் மனஉணர்வை எளிதிலே கவர்தற் பயத்தவான அரிய பெரிய பொருள்களைக் கூறும் வழியெல்லாந் தன்மை நவிற்சியும், அவற்றிடையே இயற்கையழகுப் பொருளின் வேறாவன சில வந்தால், அவற்றை அழகுபெறக் கூறல் வேண்டி உவமையும் வைத்துரைக்கும் நுட்பம் மிகவும் பாராட்டற் பாலதொன்றாம்.

இனிக்,காவிரிப்பூம்பட்டினத்து உப்பங்கழியில் நெல்லேற்றிக்

காண்டுவந்த படகுகள் தறிகடோறும் கட்டப்பட்டிருத்தற்கு இலாயத்திலே வரிசையாகக் கட்டப் பட்டிருக்கும் குதிரை வரிசையையும், சுற்றிக் கரை எழுப்பி விளங்கும் மலர்ப் பொய்கைகளுக்கு மக(ம்)மீனாற் சூழப்பட்ட மதியினையும், அங்குள்ள சோறாக்குஞ் சாலைகளிலிருந்து பெருகியோடுங் கஞ்சிக்கு யாற்றின் வெள்ளத்தையும் அக்கஞ்சி உலர்ந்து புழுதியாய் மேற்படிந்த அரண்மனை வீடுகளுக்கு வெண்ணீற்றிற் புரண்டெழுந்த களிற்றி யானைகளையும், கடற்கரையின் மேட்டுக் குப்பத்திலே உள்ள வலிய செம்படவர் கரடிக்கூடத்தில் ஒருவரோடொருவர் பிணைந்து மற்போர் புரிதலுக்கு நீலவானில் வலப்புறமாய்ச் சுழன்று வான்மீன்களொடு கலந்து செல்லுங் கோள்களையும், அச் செம்படவர் தம்முடைய குடிசை வீடுகளில் தூண்டிற் கோலையும் மீன் இடும் புட்டிலையுஞ் சார்த்தி வைத்திருத்தற்குப் போர்க்களத்திலிறந்த மறவனுக்கு நிறுத்திய கல்லின் எதிரிலே ஊன்றிய வேலையுங் கேடகத்தையும், அவர்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/211&oldid=1579447" இலிருந்து மீள்விக்கப்பட்டது