உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

179

குடிசை வீட்டு முற்றத்தில் வெண்மணலிலே வலையை உலர வைத்திருத்தற்கு நிலவின் இடையிலே சேர்ந்த இருளையும் செக்கச் சிவந்த நீரையுடைய காவிரியாறு கடலொடு கலத்தற்குக் கரியமலையைச்

சேர்ந்த சக்கர் வானையும்

தழுவிக் கிடந்த L மகவையும்,

தாயின் சுங்கச்

கொங்கையைத் சாவடியிலுள்ள காவலாளர் இரவும் பகலும் ஒழியாது தங்கடமை செய்திருத்தற்குக் கதிரவன் றேரிற் பூட்டப்பட்டு இடையறாது செல்லும் குதிரையையும், மரக்கலத்தில் வந்த சரக்கைக் கடலினின்று கரையிலேற்று தற்கும் கரையிற் கிடந்தவற்றைக் கடன்மேற் கப்பலிலேற்றுதற்கும் முகில் கடலில் முகந்த நிரை மலையிற் பொழிதலையும் அங்ஙனம் மலையிற் பொழிந்த நீர் பின் கடலிற் சேறலையும், கடற்கரையிற் பண்டசாலை முற்றங்களிலே அடுக்கிக்கிடக்கும் மூட்டைகளின்மேல் ஆண்நாய்களும் ஆட்டுக் கிடாய்களும் ஏறிக் குதித்து விளையாடுதற்கு மலைப் பக்கங் களிலே ஏறிக் குதிக்கும் வருடை மான்களையும், மாதர்கள் முருகவேளைத் தொழுதற் பொருட்டாகத் தலைமேற் குவித்த தொடிக்கைகளுக்குக் காந்தட் செடியின் கணுக்களிற் கிளைத்த கவிந்த முகைக்குலைகளையும், தெருக்களின் இருபுறத்தும் நாட்டப்பட்டதுகிற் கொடிகளுக்கு யாற்றின் இருகரையிலுமுள்ள கரும்பின் பூவையும், காவிரிப்பூம்பட்டினக் கடற்றுறை முகத்தில் அசைந்து கொண்டிருக்கும் மரக்கலங்களுக்குக் கட்டுத் தறியை அசைக்குங் களிற்றியானைகளையும், வேளாளரது நடுவு நிலைமைக்கு நுகத்தடியிற் றைத்த பகலாணி யினையும், கரிகாற்சோழன் இளைஞனாயிருந்தபோது பகைவரது சிறைக்களத்தில் அடைக்கப்பட்டிருந்தமைக்குக்கூட்டிலடைக்கப் பட்டபுலிக்குட்டியினையும், பின் அவ்வரசிளைஞன் அச்சிறைக் களத்திற் காவலரை யெல்லாங் கடந்து போய்த் தன் அரசுரிமை யினைக் கைப்பற்றியதற்குத் குழியில் வீழ்ந்த ஆண்யானை அக் குழியினைத் தூர்ந்து மேலேறிப்போய்த் தன் பெட்டையானையைச் சேர்ந்ததனையும், போர்க்கடையாளமான பூளைப்பூவும் உழிஞைப்பூவுஞ்சூடிவந்த படைக்குக் குற்றுச்செடிபம்பிய கருங்கற் பாறையினையும், போர் முரசின் வாய்க்குப் பிதுங்கின பேயின் கண்ணையும் ஆசிரியர் உருத்திரங்கண்ணார் ஆண்டாண்டு உவமைகூறி இப்பாட்டை மிகவுந் திறம்பட அமைத்தது காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/212&oldid=1579450" இலிருந்து மீள்விக்கப்பட்டது