உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

237

களையும் பெருவாயில் சிறுவாயில்களையும் அமைத்தான். மதில்களில் அம்பு எய்யும் ஏப்புழைகளை உண்டாக்கினான். பகைவர் எவராயினும் வருக; யான் அழித் தொழிப்பேன் என வஞ்சினம் கூறினான். அவன் வலிமைக்கு அஞ்சிய வேந்தர் அவன் அருளுதலுக்குக் காத்துக் கிடந்து வழிபட்டனர் என்று கூறுகிறார். கரிகாலன் அகவாழ்வு பற்றி ஆசிரியர் என்ன இயம்புகிறார்?

மக்கள் ஓடி ஆடி மகிழ்கின்றனர்; மனைவியர் தழுவி மகிழ்கின்றனர்; பகைக்கு மாறான அவன், குடும்ப வாழ்வில் குழைவுடையவனாக விளங்குகிறான் எனச் சுருங்க உரைக்கிறார்.

எடுத்துக் கொண்ட பாலையை கணவன் பிரிதலை விடுத்த பாவலர் தொடுத்து எப்படி முடிக்கிறார்?

66

“அரிமா அன்ன அணங்குடைத் துப்பின் திருமா வளவன் தெவ்வர்க் கோக்கிய வேலினும் வெய்ய கானமவன்

கோலினும் தண்ணிய தடமென் தோளே"

எனத் தலைவன் வினைமேற் செலவு விடுத்ததாகப் பாடலை நிறைவு செய்கிறார்.

நிறைவு அடிகளின் சிறப்புகள் எவை?

அரச யானைகளைத் தன் முழக்கத்தாலும் வலிமையாலும் வருந்தச் செய்யும் அரிமாவைப் போன்றவன் திருமாவளவன் என்று அவன் வரலாற்றைப் பிழிசாறாகத் தருகிறார் பாவலர். பகைவர் திருவனைத்தையும் கொள்ள வல்ல வளமிக்கான் என்பதைத் ‘திருமாவளவன்' என்னும் பெயர் கூறும் வகையால் தெரிவிக்கிறார்.

அவன் வேல் பகையை அழிக்கும் கொடுமையைப் பாலை நிலத்தின் வெம்மைக்கு ஒப்பிடுகிறார். அவ்வாறே அவனை அடைந்து அருள் வேண்டினார்க்கும் தன் குடியினர்க்கும் செங்கோலனாகத் திகழும் தன்மையைக் குறிப்பிடுகிறார்.

தலைவன் வாக்காகத் திருமாவளவன்,

“வேலின் வெம்மையும்

கோலின் தண்மையும்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/270&oldid=1579529" இலிருந்து மீள்விக்கப்பட்டது