உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மறைமலையம் - 9

நண்ணார் = பகைவர்; ஊழ் = முறைமை.

அரசுரிமை பெற்ற திருமாவளவன் மேலே என்ன செய்ததாகக் கூறுகிறார்?

அரசுரிமை பெற்றது போதும் என மகிழ்வோடு அமைந் தான் அல்லன். பகைவர் அரண்களை அழித்தான். அவர்கள் யானை, குதிரை, காலாள்களை ஒரு சேர அழித்தான் வயல் களையும் நீர் நிலைகளையும் பாழ்படுத்தினான். காடுகளை அழித்தான்; காட்டு யானைகள் ஊர் மன்றில் உலாவின; கிளிகள் பேசி மகிழ்ந்த வீடுகளில் கோட்டான்கள் கூடி ஒலித்தன; இவ்வாறு பகைகளைப் பழி வாங்கினான்.

பகைவர் கொண்ட அச்சத்தை ஆசிரியர் எவ்வாறு கூறுகிறார்?

"இவன் மதிலை இடித்துப் பொடியாக்குவான்;

கடலை மண்ணாலும் கல்லாலும் மூடி மேடாக்குவான்; வானத்தையும் இடித்து முட்டுவான்;

காற்றின் திசையையும் மாற்றி வீச வைப்பான்

وو

எனப் பகைவர் அஞ்சுவர் என்பதை குறிக்கிறார்.

திருமாவளவன் எவ்வெவரை வென்றான் என்கிறார் கடியலூரார்?

ஒளி நாட்டவர் பணிந்து ஒடுங்கவும்,

பழமைமிக்க அருவாள நாட்டவர் ஏவல் கேட்டு நிற்கவும்,

வடநாட்டவர் என்ன நேருமோ என வாட்ட முறவும்,

குடநாட்டவர் உள்ளம் கூம்பி வாடவும்,

தென்னவனாம் பாண்டியன் தன் வலிமை குன்றவும் முல்லை நாட்டவர் வழியற்றுப் போகவும், இருங்கோவேளின் இனத்தவர் அழிந்துபடவும், வெற்றி கொண்டான் என்கிறார் ஆசிரியர்.

அழித்த நாடுகளில் கரிகாலன் என்ன செய்தான்?

தான் அழித்த நாடுகளில், காடுகளை அழித்து நாடாக் கினான். குளங்களை ஆழமாகத் தோண்டி வளம் பெறச் செய்தான். உறையூரை விடுத்து கோயில்களையும் மாடங் களையும் உண்டாக்கி மக்களைக் குடியேற்றினான். கோட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/269&oldid=1579528" இலிருந்து மீள்விக்கப்பட்டது