உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

கரிகாலன் பெருமிதத்தைக் கடியலூரார் எவ்வாறு கூறுகிறார்?

235

கரிகாலன் தாய் வயிற்றில் இருக்கும்போதே தந்தையை இழந்தவன். உறவுப் பகையால் இளமையிலேயே சிறைப்படுத்தப் பட்டவன். படுகுழிப்பட்ட யானை கரையைக் குத்திச் சரித்து மேடேறித் தன் பிடியொடு சேர்ந்தது போலப் பகைச் சிறை வென்று அரிமாப் போல அரசு கட்டில் ஏறியவன் என்கிறார்.

66

கூருகிர்க்,

கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்

பிறர், பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி

அருங்கரை கவியக் குத்திக் குழி கொன்று

பெருங்கை யானை பிடிபுக் காங்கு

நுண்ணிதின் உணர நாடி நண்ணார்

செறிவுடைத் திண்காப் பேறி வான்கழித்

துருகெழு தாயம் ஊழின் எயதி"னான்

று

என்கிறார்; செறிவுடைத் திண்காப் பேறி என்றமையால் காவல் மிக்க மதிலுள் அடைக்கப்பட்டிருந்தான் என்பது புலப்படும்.

குறிக்கப்பட்ட பாடல் அடிகளால் அறியப்படும் செய்திகள்

எவை?

கூருகிர்க் கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு என்பதால் கூரிய நகங்களையும் வளைந்த வரிகளையும் உடை UI புலிக்குட்டி கூட்டுள் வளர்ந்தது போல வளர்ந்தான் என்பதும், பெரிய வலிய குழியின் கரையைக் கொம்பால் குத்தி யானை வெளிப்பட்டுத் தன் பெண் யானையொடு கூடியது போல அரசு எய்தினான் என்பதை,

“அருங்கரை கவியக் குத்திக் குழி கொன்று பெருங்கை யானை பிடிபுக் காங்கு"

என்று கூறினார்.

வலிய மதினுள் சிறை வைத்தார் என்றும், அவர் பகை யாயினார் என்றும், அம்மதிலைத் தன் வாள் வலியால்தடுத்தோரை அழித்து மேலேறிக் கடந்தான் என்றும், முறையாக ஆள வேண்டிய ஆட்சி உரிமையன் அவன் என்றும் அவன் இளந்தை வரலாற்றை எடுத்துரைத்தார்

என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/268&oldid=1579526" இலிருந்து மீள்விக்கப்பட்டது