உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மறைமலையம் – 9

ஊணா, உடையா, உறைவா, வேண்டும் பிறபிறவா, அற நெறியா, அன்பு வாழ்வா எல்லாம் எல்லாம் குறைவற எவர்க்கும் எங்கும் வாய்க்கும் சிறப்பு முட்டாச் சிறப்பாம். இம்முட்டாச் சிறப்பால் ஓங்கியது காவிரிப்பும்பட்டினம்.

அப்பட்டினத்தில் உறையும் பேறே பெரிது; அதில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து விரும்பியவனை மணந்து இல்லறம் பூண்டு, நிறை வீடு பேறாகச் சிறப்பது தனிப்பேறு. அவ்வாறாகவும் அப்பட்டினத்தையே வேந்தன் கரிகாலன் பரிசாகத் தந்தான் எனினும் அவ்வின்பம் உன்னைப் பிரிந்து போய் வாழ நேருங் கால் - பிரிதலை எண்ணுங்கால் எண்ணும் நெஞ்சம் வேம்! உடலம் வேம்! உயிரும் வெம்பிச்சாம். அப்படி செய்வன எவை?

உன்னைக் கண்டு ஒப்ப நோக்கி ஒன்றுபட்டபோதின் முதல் உடன்பாட்டு மெய்ப்பாடாக உன் கூழை விரித்தாயே, காதொன்று களைந்தாயே அவற்றை மறக்கமுடியுமா? கூழைதானே கூந்தல் எனப் பெயர் கொண்டது; நீண்டு தழைத்தது; கரு முகிலாய்ப் பரந்து படிந்தது! அக்காதணிதானே தலையணி முதல் காலணி ஈறாகப் பல்லணிகள் பூண்டு கொள்ளை கொள்ளும் நிலை ஆயது! ஆதலால், பொருள் தேடப் போமாறு வலிந்து இழுக்கும் நெஞ்சமே யான், நீ என்னபாடு என்னைப்படுத்தினாலும், வரமாட்டேன்! நீ பிரிவுக் கொடுமைக்குத் தூண்டினாலும் அத்தூண்டுதல் தானே நேயப் பெருக்காய் வெள்ளமாய்ச் சிறக்கச் செய்கின்றது. அதனால் எக்குறையும் இல்லாமல் என்றும் இனிது வாழ்வாயாக! என்பவை ஓரளவால் அறியும் நயமாம்!

பட்டினத்தைக் காவிரி முதல் கூறிய ஆசிரியர், பாலையைக் கூறிய அவர் பின்னும் விரிப்பானேன்?

பாட்டுடைத் தலைவனாம் திருமாவளவனைப் பற்றிக் கூறினார் அல்லரே! அவன் வீறும் வெற்றியும் பேறும் பெற்றியும் கூறித்தானே ஆக வேண்டும். இல்லையானால் பெயர் சுட்டப் படா எவரோ ஒரு வேந்தரை எண்ணிக் கொள்ளத்தானே வைக்கும். ‘பிரியேன்' என்றவன் பிரியாமல் இருக்க மாணத் தடையாம் ஒன்றைச் சுட்டாமல் விட்டானாகவும் ஆகுமே; ஆதலால் மேலும் தொடுத்தார். மேலும் எண்பத்தோர் அடிகள் தாடுத்தார். முன்னை நெறி மாறாமல் பின்னை நெறியைப் பாடினார். 79 அடிகள் புறப்பொருளும், இரண்டே இரண்டு அடிகள் அகப்பொருள் சிறக்கவும் பாடினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/267&oldid=1579525" இலிருந்து மீள்விக்கப்பட்டது