உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

233

அச்சமில்லாத வாழ்வு மக்கள் கொள்வதை ஆசிரியர் எவ்வாறு கூறுகிறார்?

பரதவர் முற்றங்களில் மீன்கள் உலாவித் திரிகின்றன. ஊன் விற்பவர் முற்றங்களில் ஆடு முதலாம் விலங்குகள் நடமாடித் திரிகின்றன. என்பதால் கொலைஞரும் கொடுமை புரியாமையைக் காட்டி நாட்டில் அச்சமில்லாமையை விளக்குகிறார்.

மற்றைச் சிறப்புகளாக ஆசிரியர் கூறுவன எவை?

வேள்விகள் சிறப்ப நடைபெறுகின்றன. விருந்தினராக வருவாரை மிகப் பேணுகின்றனர்; அறவொழுக்கமும் அன்பு நெறியும் உடையவராய் உழவர்கள் வாழ்கின்றனர்.

பொய் கூறாமல் மெய் கூறி, தாம் கொள்ளும் பொரு ளுக்குத் தக்க பொருளைத் தந்தும், தாம் கொடுக்கும் பொரு ளுக்கு மிகாமல் பொருளைப் பெற்றும் நுகக் கோலின் நடுவில் உள்ள ஆணியைப் போல் நடுவுநிலை உடையவராய் வாணிகம் செய்வார் விளங்குகின்றனர் என்று காவிரிப் பூம்பட்டினத்தின் மற்றைச் சிறப்புகளாக ஆசிரியர் கூறுகிறார். மேலும் பல நாட்டுப் பல மொழி பேசும் மக்களும் தமிழ் பேசும் மக்களொடு கலந்து உறவாடி மகிழ்ந்து வாழ்கின்றனர் என்பதை,

“மொழி பல பெருகிய பழிதீர் தேயத்துப்

புலம் பெயர் மக்கள் கலந்தினி துறையும்”

என்கிறார்.

பட்டினச் சிறப்பை விரித்துரைத்த கண்ணனார் பாலையைப் பற்றி எவ்வாறு நயமாகச் சுருக்கிக் கூறுகிறார்?

“முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்

வாரிரும் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன் வாழிய நெஞ்சே”

என்று தலைவன் தலைவியைப் பிரிய மாட்டாதவனாய்த் தன் நெஞ்சிற்குக் கூறுவதாகக் கூறுகிறார்.

சுருக்கிக் கூறிய இத்தொடரில் அமைந்துள்ள நயம் யாது?

சிறப்பு.

முட்டருஞ்சிறப்பு-முட்டுப்பாடு என்பது எதுவும் நெருங்காத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/266&oldid=1579524" இலிருந்து மீள்விக்கப்பட்டது