உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மறைமலையம் – 9

வரையாடுபோல் நாய்கள், ஆடுகள் ஏறி விளையாடுகின்றன என்று கலவணிகம் பற்றிப் பட்டினப்பாலை கூறுகின்றது.

புகார் நகரில் அங்காடித் தெரு எவ்வாறு விளங்குகின்றது?

ஏணிகள், திண்ணைகள், சிறிய வாயில்களும் பெரிய வாயில்களும் உடையனவாய் மாளிகைகள் ஆகியவை பெருகி யவாய் அங்காடித் தெரு விளங்கும். ஆங்குள்ள மாடங்களில் அழகிய மகளிர்கள் பவழம் போல் நிறமும் மயில்போல் தோற்றமும் மான்போல் பார்வையும் கிளிபோல் மழலையும் உடையவர்கள், அவர்கள் காற்று வரும் சாளரத்தினை நெருங்கி நின்று தொழுது நிற்பர்; குழல் இசைக்கவும் யாழ் ஒலிக்கவும் முழவு முழங்கவும் முரசம் அறையவும் இடையீடு இல்லாமல் விழாக்கள் அங்காடித் தெருவில் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். நகரில் விளங்கும் கொடி வகைகள் எவை?

கோயில் வாயில்களில் பலரும் வணங்குமாறு சேவற் கொடியும், விற்கப்படும் பண்டங்களின் விளக்கமாக ஆற்று மணல் மேல் பூத்த கரும்பின் பூப்போல் விளங்கும் கொடியும், அறிவு மேம்பட்டார் வாதிட்டு மெய்ப்பொருள் உணர்த்துவ தற்காக எடுக்கப்பட்ட கொடியும், துறைமுகங்களில் கப்பல் மேல் கட்டப்பட்ட கொடியும், கள்ளுக் கடைகளில் ஏற்றப்பட்ட கொடியும், பிறபிற அறிவிப்புக் கொடிகளும் நிரம்பியிருத்தலால் கதிரின் வெயிலும் புகாவாறு நிழல் கொண்டிருக்கும்.

தெருக்களில் விளங்கும் பொருள் வகைகள் எவை?

அயல்நாடுகளில் இருந்து கப்பலில் வந்த குதிரைகளும், வண்டிகளிலே கொண்டு வரப்பட்ட மிளகுப் பொதிகளும், வடமலையில் இருந்துகொண்டு வந்த மணியும் பொன்னும், மேல் மலையில் இருந்துகொண்டு வந்த சந்தனம் அகில் கட்டைகளும், தென்கடலில் இருந்து எடுத்து வரப்பட்ட முத்துக்களும், கீழ்கடலில் இருந்து எடுத்து வந்த பவழங்களும்,

கங்கைப் பொருள்களும்,

காவிரிப் பொருள்களும்,

ஈழத்தில் இருந்து வந்த உணவுப் பொருள்களும்,

காழகம் என்னும் கடாரத்தில் இருந்து வந்த அரிய பல பொருள்களும் நிலப் பரப்பெல்லாம் தோன்றாமல் பரவிக் கிடக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/265&oldid=1579523" இலிருந்து மீள்விக்கப்பட்டது