உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

.

231

கொம்பை நட்டு அதனைக் கடல் தெய்வமாகக் கொண்டு வழிபடுவர். கள் பருகிக் களிப்பர்; தழையுடை அணிந்த தம் மனைவியரொடு முழு நிலவுப் பொழுதில் விரும்புவன உண்டு விளையாடுவர்; மலையைத் தழுவும் முகில் போலவும் தாயைத் தழுவும் மகவு போலவும் கடலோடு காவிரி கலக்கும் புகார்த் துறையில் நீராடுவர்; நண்டுகளைப் பிடித்தும் பாவை செய்தும் பகற்பொழுதெல்லாம் போக்குவர்; இவ்வாறு காவிரித்துறை விளங்கும் என்கிறார் கண்ணனார்.

கடைசி யாமச் செயல்களாகப் தென்ன?

பட்டினப்பாலை கூறுவ

கணவனோடு தழுவிய மகளிர் பட்டாடையை விடுத்து மென் துகில் அணிவர்; தேனுண்ணல் நீங்கி இன்பத் தேனில் திளைப்பர்; கணவன் சூடிய மாலையை மனைவியும், மனைவி சூடிய மாலையைக் கணவனும் மாற்றி மயங்கிச் சூடுவர். கடலிற் கட்டுமரத்திற் சென்ற பரதவர் மாளிகைகளில் ஏற்றப்பட் விளக்குகளை எண்ணுவர்; நகரத்துள்ளார் முன் யாமத்தில் பாட்டு கேட்டும் நாடகம் கண்டும் உறங்காமல் பொழுது போக்கியவர் கடைசியாமத்தில் கண்ணுறக்கம் கொள்வர். இவை கடைசியாமச் செயல்களாகப் பட்டினப்பாலை கூறுவதாம்.

அரசன் பொருளைக் காப்பவர் எப்படி காக்கின்றனர்?

அரசன் பொருளைக் காப்பவர் அயர்வில்லாராய்க் காக் கின்றனர். இடைவிடாமல் சுழலும் கதிர்போல் சுற்றிச் சுழன்று காக்கின்றனர். வாங்க வேண்டிய ‘உல்கு' என்னும் சுங்க வரியைத் தவறாமல் வாங்கிச் சேர்க்கின்றனர்.

கலவணிகம் பற்றி கூறும் செய்திகள் எவை?

கடலில் இருந்து முகந்த நீரை முகில் மலையில் பொழிவது போலவும், மலையில் பொழிந்த முகில் நீர் கடலைச் சேர்வது போலவும் பொருள்கள் அளவில்லாமல் நீரில் இருந்து நிலத் திலும், நிலத்தில் இருந்து நீரிலும் ஏற்றவும் இறக்கவும் படுகின்றன. எப்பொருளும் களவு போகாமல் காக்கப்படுகின்றன.

அனுப்பப்படும் பண்டங்கள் அனைத்தும் புலி முத்திரை டு விடுக்கப்படுகின்றன. கடற்கரையில் குவிந்து கிடக்கும் பண்டக் குவியல்களின் மேல் மலை மேல் ஏறி விளையாடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/264&oldid=1579522" இலிருந்து மீள்விக்கப்பட்டது