உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மறைமலையம் – 9

காவிரிப் பூம்பட்டினச் சூழல் எத்தகையது?

பொழில்கள்,சோலைகள், பொய்கைகள், ஏரிகள் ஆகியவை அமைந்த சூழலை உடையது காவிரிப்பூம்பட்டினம்.

காவிரிப் பூம்பட்டினக் குடியிருப்புகளை ஆசிரியர் எவ்வாறு கூறுகிறார்?

கதவுகளில் புலியுருவம் பொறிக்கப்பட்டிருக்கும்; செல்வ வளம் மிக்கதாக வீடுகள்இருக்கும்; அறம் சிறந்தவர்களாக மக்கள் இருப்பர். அவர்கள் சமைத்து வடித்த வடிகஞ்சி ஆறுபோலச் செல்லும்; அங்கு மாடுகள் சென்று மிதித்தலால் சேறாகிவிடும்; அச்சேற்றின் மேல் தேர் ஓடுதலால் புழுதியாகப் படரும்; அப்புழுதி வனப்புற வரையப்பட்ட சுவர் ஓவியங்களில் படியும்; அதனால் வெண்ணீற்றில் புரண்ட யானை போல் அவை காட்சி ன தரும். வீட்டு முற்றத்தில் கேணிகளும், தவச் சாலைகளும், வேள்விச் சாலைகளும் விளங்கும். வேள்விப் புகையால் வெறுப்புற்ற புறாக்களும் குயில்களும் பெட்டைகளுடன் அகன்று போகும் என்று கூறுகிறார்.

பரதவர் இயல்புகளாகக் கூறுவன எவை?

பரதவர் இறா மீனைச் சுட்ட தசையை உண்பர்; ஆமைப் புழுக்கு உண்பர். அடப்பம் பூவைச் சூடுவர்; ஆம்பல் பூவைப் பறித்து அணிவர்; நீலவானில் வலமாகச் சுழலும் கதிரோனைச் சுற்றி கோள் மீன்கள் வட்டமிடுவது போல நின்று போரிடுவர்; சீற்றங்கொண்டு தாக்குவர்; கவண் கல்லாலும் எறிவர்; அதற்கு அஞ்சிப் பனை மரத்தில் இருந்த பறவை பறந்து போகும்.

புறச்சேரி பற்றி ஆசிரியர் கூறுவன எவை?

புறச்சேரிக் குடியிருப்பில் பன்றிகள், குட்டிகளோடு திரியும். கோழிகள் காணப்படும்; உறைக் கிணறுகள் உண்டு; ஆட்டுக் கடாக்களோடு சிவல் பறவை விளையாடும்.

காவிரித் துறைச் சிறப்புகளாக அறிவன எவை?

நடுக்கல்லில் வழிபடு தெய்வமாக நின்றவனுக்குக்கேடயத்தை யும் வேலையும் வரிசையாக வைத்ததுபோல நெடிய தூண்டில் கம்பைச் சுவரில் சார்த்தியிருப்பர்; நிலவின் ஊடுதோன்றும் இருள் போல மணல் முற்றத்தில் வலை உலரும்; சுறா மீனின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/263&oldid=1579521" இலிருந்து மீள்விக்கப்பட்டது