உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

229

காவிரியின் புனல் பெருக்கால் பொன் கொழிக்கும் என்பதன் விளக்கம் என்ன?

பொன் கொழித்தலால் தானே காவிரிக்கு 'பொன்னி' என்று பெயரும் உண்டாயது. நெல் நிறம், பொன் தானே! நெல்லும் கரும்பும் வாழையும் பெருக விளைந்தால் பொன் தராவா? காவிரி வழங்கும் செல்வ வளம் குறித்தே பொன் வழங்கும் (கொழிக்கும்) என்றார்.

காவிரியின் வளப் பெருக்கை எவ்வாறு கூறுகிறார் ஆசிரியர்? காவிரி நீர்ப் பெருக்கால் விளைவு இடையறாது பெருகும். கரும்பாலையின் புகையால் நெய்தல் பூ வாடும்

காய்ந்த நெல்லின் கதிரைத் தின்று பெரிய எருமையின் கன்று நெற் கூடுகளின் நிழலில் தங்கும்; உறங்கவும் செய்யும். குலைகளையுடைய தென்னை போல்

வாழை உயர்ந்திருக்கும்;

மஞ்சள் பயிர், கமுகினைப் போல் காட்சி தரும்;

மாமரம், பனை, சேம்பு, இஞ்சி முதலியவை செறிந்திருக்கும்

என்கிறார்.

பாக்கங்களின் சிறப்பாக ஆசிரியர் கூறுவதென்ன?

வீட்டு முற்றத்தில் மகளிர் நெல்லை அவித்துக் காயப் போட்டுள்ளனர். அந்நெல்லைத் தின்ன வரும் கோழிகளைக் காதில் அணிந்த குழை என்னும் அணிகலத்தைக் கழற்றி எறிந்து ஓட்டுகின்றனர். அதனால் அக்குழைகள் தெருவில் சிதறிக் கிடக்கின்றன. இளஞ் செல்வச் சிறுவர்கள் நடை வண்டி ஓட்டு கின்றனர். அவ்வண்டி தடங்கல் படுமாறு குழைகள் செய்கின்றன. இப்படிப்பட்ட இடர் அன்றி வேறு இடர் அறியாதது பாக்கம் ர் என்று பாக்கச் சிறப்பைக் கூறுகிறார் ஆசிரியர்.

உப்பு வணிகம் பற்றி அறிவது என்ன?

க ல் விளை உப்பை எடுத்துப் பல ஊர்களுக்கும் கொண்டு சென்று வாணிகம் செய்தலால் பண்ட மாற்றாகப் பெறப்பட் நெல்லை ஏற்றிய படகுகள், வரிசையாகக் கட்டப்பட்ட குதிரைகளைப் போலக் காட்சி தரும் அங்குள்ள கழிமுகங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/262&oldid=1579520" இலிருந்து மீள்விக்கப்பட்டது