உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மறைமலையம் – 9

பட்டினப்பாலையைப் பாடியவரும் பாடப்பட்டவரும் எவர்?

பட்டினப்பாலையைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்பார். பாடப்பட்ட வேந்தன் திருமாவளவன் என்பான். கரிகாலன் என்பானும் அவன். கண்ணனார் பெரும் L பாணாற்றுப் படையைப் பாடியவரும் ஆவர் என்பதை முன்னரே அறிந்துள்ளோம். பெயர் விளக்கமும் அங்கே சொல்லப்பட்டதே. கரிகாற் பெருவளத்தான் இப்பத்துப்பாட்டில் எவரால் எப்பாட்டுப் பாடப் பெற்றான்?

கரிகாற் பெருவளத்தான் முடத்தாமக் கண்ணியாரால், பொருநராற்றுப்படையில் பாடப்பட்டுள்ளான். பத்துப் பாட்டில் இரண்டு பாடல் பெற்றவன் கரிகாலன்; இரண்டு பாடல் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். கரிகாலன் பெயர் விளக்கம் பொருநராற்றுப்படையில் கூறப்பட்டதாம். காவிரிப் பூம்பட்டினத்தைப் பாடுபவர் காவிரியை விரித்துப் பாடுவது ஏன்?

காவிரி புகும் இடத்தில் அமைந்தது தானே காவிரிப்பூம் பட்டினம். அதன் வளம்தானே சோழர்களை வளவர் ஆக்கியது. ஆதலால் அதனை விரித்துப் பாடல் மிகத் தக்கதாம்.

காவிரி வளத்தைக் கண்ணனார் எப்படித் தொடங்குகிறார்?

சுக்கிரன் என்னும் வெள்ளி கிழக்கில் இருந்து மேற்காகச் சென்றால் மழை பெய்யும்; அந்நிலை மாறித் தெற்காகச் சென்றால் மழை பெய்யாது என்பர். வானம்பாடி என்னும் பறவை வான் துளியுண்டு வாழ்வது, அது மழைநீர் இன்றி வருந்தும் நிலையில் மழை பெய்யாது என்பர்.இத்தகு நிலைகளிலும் காவிரிப் பெருக்கு அற்றுப் போகாமல் மேல் மலையில் இருந்து கீழ்கடல் வரை பெருகி ஓடும் என்று தொடங்குகிறார்.

“வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரி" (5-6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/261&oldid=1579519" இலிருந்து மீள்விக்கப்பட்டது