உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

227

பட்டினப்பாலை ஓர் அறிமுகம்

இரா. இளங்குமரனார்

பட்டினப்பாலை என்பதன் பொருள் என்ன?

பட்டினம்=காவிரிப் பூம்பட்டினம்.

பாலை = பாலை ஒழுக்கம் எனப்படும் பிரிவு.

காவிரிப் பூம்பட்டினத்தையும் பிரிவு ஒழுக்கத்தையும் கூறும் நூல் பட்டினப்பாலை எனப்பட்டது.

பட்டினம், பட்டணம் என்பவற்றின் வேறுபாடு என்ன?

கடற்கரை சார்ந்த பேரூர் பட்டினமாகும்.

உள்நாட்டில் அமைந்த பேரூர் பட்டணமாகும்.

முன்னதிலும் பின்னதிலும் ‘பட்டு' உண்டு. அணம், இனம் என்பன, வேறுபடுகின்றன. இனம் என்பது தொகுதி தொகுதி யாக அமைந்தது; அணம் என்பது (அண் + அம்) செறிந்து அமைந்தது.

பட்டிபட்டு என்பன ஊர்ப் பெயர்களாக இருப்பன.

டு: மேட்டுப்பட்டி, கோயில்பட்டி

செங்கழு நீர்ப்பட்டு (செங்கல்பட்டு), சேற்றுப்பட்டு.

பட்டினப்பாலையின் வேறு பெயர் என்ன?

பட்டினப்பாலையின் வேறு பெயர் வஞ்சி நெடும்பாட்டு என்பது. அகவலால் ஆய அப்பாட்டு அகவலடிகள் நூற்றுமுப்பத்தெட்டு வஞ்சி அடிகள் நூற்று அறுபத்து மூன்று. ஆக முந்நூற்று ஓர் அடிகளைக் கொண்டுள்ளமையால், வஞ்சியடிகளின் மிகுதி கருதி வஞ்சி நெடும்பாட்டு எனப்பட்டதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/260&oldid=1579518" இலிருந்து மீள்விக்கப்பட்டது